"இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்".ஈரான் முழுவதும் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!

"இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்".ஈரான் முழுவதும் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்!


இஸ்ரேலின் காசா ,லெபனான் ஆக்கிரமிப்புக்களுக்கு எதிராக ஈரான் முழுவதும் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தெஹ்ரான், மஷாத், சனந்தாஜ், எஸ்ஃபஹான், ஷிராஸ் மற்றும் ராஷ்ட் உட்பட ஈரான் முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வீதிகளில் இறங்கினர். அவர்கள் பாலஸ்தீனியக் கொடிகளையும், லெபனானின் ஹிஸ்புல்லா, யேமனின் அன்சருல்லா மற்றும் ஈராக்கின் மக்கள் படைகளுக்கு ஆதரவைக் காட்டும் சுவரொட்டிகளுடன்ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல ஆர்ப்பாட்டக்காரர்கள் "இஸ்ரேலுக்கு மரணம்" என்று கோஷமிட்டனர், அவர்கள் ஈரான் பிராந்தியத்தில்  இஸ்ரேலின் சமீபத்திய தொடர் பயங்கரவாத செயல்களுக்கு எதிராக பதிலடி கொடுக்க அரசாங்கதிற்கு அழைப்பு விடுத்தனர். “அமெரிக்கா இஸ்ரேலை ஆதரிக்கிறது,  இஸ்ரேலுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைஎடுக்காதவரை, இந்த அரக்கர்களை நீங்கள் அடக்க முடியாது, ”என்று கோஷமிட்டனர். 

காசாவில் இஸ்ரேலின் போரில் இதுவரை 41,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர், பெரும்பான்மையானவர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள். வெள்ளிக்கிழமை தியாகியான ஹிஸ்புல்லாஹ் தலைவர் செய்யத் ஹசன் நஸ்ரல்லா உட்பட, சமீபத்திய மாதங்களில் பல முக்கியமான பிரமுகர்களையும் இஸ்ரேல் படுகொலை செய்துள்ளது. 

இந்நிலையில் ஈரான் அரசாங்கம் இஸ்ரேலுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று மக்கள் அரசாங்கத்தை வலியுறுத்தி கோஷமிட்டனர்.



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post