Ticker

6/recent/ticker-posts

Ad Code



இஸ்ரேலுக்கு அதிர்ச்சி கொடுக்கும் ஹிஸ்புல்லாவின் அறிவிப்பு!

கடந்த மாதம் ஹசன் நஸ்ரல்லாவை இஸ்ரேல் (Israe) கொன்றதைத் தொடர்ந்து “நைம் காசிமை” (Naim Qassem) தலைவராக ஹிஸ்புல்லா அறிவித்துள்ளது.

துணைத் தலைவராக இருந்து பதவி உயர்வு அறிவிக்கப்பட்ட காசிம், லெபனானை தளமாகக் கொண்ட ஹிஸ்புல்லா அமைப்பின் பொதுச் செயலாளராக ஹசன் நஸ்ரல்லாவுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஹிஸ்புல்லாஹ்வின் சிரேஷ்ட சபை தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான அதன் செயல்முறைக்கு இணங்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மாத தொடக்கத்தில், லெபனானில் போர்நிறுத்தத்தை ஏற்குமாறு இஸ்ரேலியர்களுக்கு அழைப்பு விடுத்ததோடு, இல்லாவிட்டால் இஸ்ரேலுக்கு வலியை எதிர்நோக்க நேரிடும் என எச்சரித்தவரும் இவர் ஆவார்.

செப்டம்பர் மாத இறுதியில் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலால் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.

அந்த மாதத்தில் இஸ்ரேல் பல மூத்த ஹிஸ்புல்லா அதிகாரிகளையும் இலக்கு வைத்திருந்தமையும் தெரியவந்தது.

இந்த நிலையில், ஹிஸ்புல்லாவின் கொள்கைகள் மற்றும் இலக்குகளை கடைபிடித்ததன் காரணமாக காசிம் குறித்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

நஸ்ரல்லாவின் உறவினரான ஹஷேம் சஃபிதீன் ஈரானுடன் தொடர்புடைய ஹிஸ்புல்லாவின் தலைமைப் பொறுப்பை ஏற்க விரும்பினார், ஆனால் அவர் பெய்ரூட்டில் இஸ்ரேலிய தாக்குதலில் கொல்லப்பட்டார்.

71 வயதான காசிம் பெரும்பாலும் ஹிஸ்புல்லாவின் "நம்பர் 2" என்று கருதப்படுகிறார்.

1980 களின் முற்பகுதியில் குழுவை நிறுவிய மத அறிஞர்களில் ஒருவர் என்பதுடன் ஷியா அரசியல் செயல்பாட்டில் நீண்ட வரலாற்றைக் கொண்டவர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2006 ஆம் ஆண்டு இஸ்ரேலுடனான ஹிஸ்புல்லாக்களின் போரைத் தொடர்ந்து நஸ்ரல்லா தலைமறைவாகிய பின்னர், பொது வெளியில் தொடர்ந்து தோன்றிய மிக மூத்த ஹிஸ்புல்லா அதிகாரி காசிம் ஆவார்.  

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

0 Comments