அந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. தொடர்ந்து களமிறங்கிய அந்த அணி போராடி 49.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 232 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு சுசி பேட்ஸ் 4, லாரா டவுன், கேப்டன் சோபி டேவின் 9, மேடி க்ரீன் 15, இஸ்பெல்லா கேஸ் 25 ரன்கள் எடுத்து ஏமாற்றத்தை கொடுத்தனர்.
இருப்பினும் துவக்க வீராங்கனை ஜார்ஜியா ஃபிலிம்மர் 39 ரன்களும் மிடில் ஆர்டரில் ப்ரூக் ஹால்லிடே அபாரமான அரை சதமடித்து 86 ரன்களும் டியா டஹூஹு 24* ரன்களும் எடுத்து கை கொடுத்தனர். இந்திய அணிக்கு அதிகபட்சமாக தீப்தி சர்மா 3, பிரியா மிஸ்ரா 2 விக்கெட்டுகள் எடுத்தனர். பின்னர் 233 ரன்களை துரத்திய இந்திய அணிக்கு சபாலி வர்மா 12 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.
ஆனால் மறுபுறம் நம்பிக்கை நட்சத்திரம் ஸ்மிருதி மந்தனா நிதானமாக விளையாடி ரன்களை குவித்தார். அவருடன் இரண்டாவது விக்கெட்டுக்கு 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த யாஸ்டிகா பாட்டியா 35 ரன்களில் அவுட்டானார். அடுத்ததாக வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் தம்முடைய பங்கிற்கு ரன்களை குவித்தார். அவருடன் சேர்ந்து 3வது விக்கெட்டுக்கு 117 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த மந்தனா இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தார்.
தொடர்ந்து அசத்தலாக விளையாடிய அவர் 10 பவுண்டரியுடன் சதமடித்து 100 (122) ரன்கள் விளாசி அவுட்டானார். இதையும் சேர்த்து 8வது சதத்தை பதிவு செய்துள்ள அவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக சதங்கள் அடித்த வீராங்கனை என்ற மிதாலி ராஜ் வாழ்நாள் சாதனையை உடைத்து புதிய சாதனை படைத்துள்ளார்.
அந்த பட்டியல்: 1. ஸ்மிரிதி மந்தனா: 8* 2. மிதாலி ராஜ்: 7 3. ஹர்மன்ப்ரீத் கௌர்: 6
இறுதியில் ஹர்மன்ப்ரீத் 59* ரன்களும் ஜெமிமா 22 ரன்களும் எடுத்ததால் 44.2 ஓவரிலேயே 236-4 ரன்கள் எடுத்த இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக ஹன்னா ரோ 2 விக்கெட்டுகள் எடுத்தும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அதனால் 2 – 1 (3) என்ற கணக்கில் இத்தொடரை இந்திய மகளிரணி வென்றுள்ளது. குறிப்பாக ஆடவர் கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் இந்தியாவை ஒரு டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து தோற்கடித்துள்ளது. அந்த தோல்வியால் ஏமாற்றமடைந்த இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக அமைகிறது.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments