பீஸ் கட்டாத மாணவர்கள் - சாலையில் அமர வைத்த கொடூர நிர்வாகம்

பீஸ் கட்டாத மாணவர்கள் - சாலையில் அமர வைத்த கொடூர நிர்வாகம்

பள்ளிக்கட்டணம் செலுத்தாத மாணவர்களை சாலையில் அமர வைத்துள்ளது பள்ளி நிர்வாகம்.

சாலையில் பள்ளி மாணவர்கள்

உத்தர பிரதேச மாநிலம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி கட்டணம் செலுத்தாததால் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை பள்ளிக்கு உள்ளே அனுமதிக்கவில்லை. 

மாறாக கொளுத்தும் வெயிலில் பள்ளிக்கு வெளியே உள்ள சாலையில் அமரவைக்கப்பட்டனர். இந்த அவமதிப்பால் மாணவ, மாணவிகள் கண்ணீருடன் முகத்தை மூடி கொண்டு அமர்ந்திருந்தனர். அதனை வீடியோ எடுத்து பெற்றோர்களுக்கு அனுப்பியுள்ளனர். 

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வங்கியின் அழுத்தம் மற்றும் செலுத்தப்படாத நிலுவைத் தொகையால் ஏற்பட்ட நிதி நெருக்கடி காரணமாக, வேறு வழியில்லாமல் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள நேரிட்டதாக பள்ளியின் முதல்வர் சைலேஷ் குமார் திரிபாதி தெரிவித்துள்ளார். 
மேலும் வீடியோ எடுப்பதற்காக 2 நிமிடங்கள்தான் வெளியே அமரவைக்கப்பட்டதாகவும், பெற்றோர்கள் உள்ள வாட்ஸ்ஆப் குழுவில் தான் பகிர்ந்தேன். ஆனால் அது சமூகவலைத்தளங்களில் பரவிவிட்டது என கூறி விட்டு இந்த செயலுக்கு வருத்தமும் தெரிவித்துள்ளார்.

ஆனால் இது குறித்து விசாரணை நடத்தி பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க உள்ளதாக மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post