
சுவிட்சர்லாந்திலுள்ள வணிக நிறுவனம் ஒன்றினால் வாரந்தோறும் வெளியிடப்படும் Coopzeitung என்ற இதழில் 95ம் பக்கத்தில் வெளிவந்துள்ள தமிழ் மொழிக்கும், இலங்கைக்கும் கௌரவம் வழங்கும்படியான தகவல் ஒன்றினை, சுவிட்சு தமிழ் வானொலி இயக்குநர் மதன் தேவா என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார்.
வாரந்தோறும் வெளியாகும் இச்சஞ்சிகையில் கேள்வி-பதில் பகுதியில் வாசகர்களால் கேட்கப்படும் கேள்விகளுக்கு இதழாசிரியர் பதில் கூறுவார்.

அதன்படி இந்த வாரத்தில், 'உலகத்தில் பழமையான மொழி எது?' என்ற கேள்வி கேட்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிடும் அவர், அதற்கு இதழாசிரியர் அளித்த விடையில், உலகில் மிகவும் பழமையான; இன்றும் பேசப்படுகின்ற மொழி தமிழ் என்று குறிப்பிட்டிருப்பதாக குறிப்பிடுகிறார்.
சீனம், அரபு, பேர்சி மற்றும் அரமேயம் ஆகிய மொழிகளை மிகவும் பழைமையான மொழிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளதுடன், தமிழையும் அத்துடன் சேர்த்துக் குறிப்பிட்டிருப்பது, தமிழ் மொழியை ஐரோப்பியர் எந்தளவுக்கப் புரிந்து வைத்துள்ளார்கள் என்பதைத்தான் கோடிட்டுக் காட்டுகின்றது.
குறிப்பாக உலகப் படத்தில் தமிழ் பேசும் இடம் என்று நேரடியாகவே இலங்கையை அம்புக்கறியிட்டு சுட்டிக்காட்டியிருப்பது, பழைமையான ஒரு நாகரிகத்தைக் கொண்ட நாடு இலங்கை என்பதை வலியுறுத்துகின்றது.
ஐரோப்பாவிலிருந்து "செருமன்" மொழியில் வெளி வருகின்ற இந்த வார இதழில், தமிழ் மொழி ஒரு பழைமையான மொழிதான் என்பதை உறுதிப்படுத்தியிருப்பது மகிழ்ச்சி தரும் ஒரு விடயமாகும்!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments