பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராகின்றார்?

பிரியந்த வீரசூரிய பதில் பொலிஸ்மா அதிபராகின்றார்?


அரசியலமைப்பு அதிகாரத்தின்படி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, பதில் பொலிஸ் மா அதிபராக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமித்துள்ளார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாநாயக்க கடந்த செப்தம்பர் 27ம் திகதியன்று ஜனாதிபதி செயலகத்தில் இவரது நியமனக் கடிதத்தைக் கையளித்தார்.

ஜூலை மாதம் உச்ச நீதிமன்றத்தால் இடைநிறுத்தப்பட்ட தேசபந்து தென்னகோனுக்குப் பதிலாக மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பதில் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கான முதல் தகுதியாக இவரது நேர்மையும்,  ஊழலைத் தடுக்க பயமின்றிக் குரல் கொடுக்கும் திறனும் கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக இவர் திரும்ப திரும்ப இடமாற்றங்கள் பெற்ற தருணங்களும் உண்டு.

பிரியந்த வீரசூரிய தனது பொலிஸ் பணியின்போது சகலவிதமான சேவை  நடவடிக்கைகளிலும் அதிக பங்களிப்பு செய்துள்ளமை, இவரது கல்வித் தகைமை, இவருடைய நேர்மையும்; குறிப்பாக காவல்துறையினர் எப்போதும் நேர்மையாக நடந்துகொள்ள வேண்டும் என்ற இவரது நல்லெண்ணம் என்பனவே இவர் இப்பதவிக்கு வரக் காரணமாக இருந்துள்ளது.

1969 பெப்ரவரி 9ம் திகதி தொடங்கொடையில் பிறந்துள்ள இவர், சிறுவயதிலேயே தந்தையின் அன்பை இழந்தவராவார். கடுமையான பொருளாதாரச் சிரமங்களுக்கு மத்தியில் தாயாரால் வளர்க்கப்பட்ட பிரியந்த வீரசூரிய, பொருளாதாரப் பற்றாக்குறை காரணமாக க.பொ.த. சாதாரண தரத்திற்குப் பின்னர் தனது கல்விப் பயணத்தை நிறுத்திவிட்டு போலீஸ் பணியில் சேர்ந்தார். 

உயர்தரத்தில் தேர்ச்சி பெறுவதற்கான தகுதி அடிப்படையில், இவர் துணை போலீஸ் இன்ஸ்பெக்டர் தேர்விலும் தேறினார்.

1988ம் ஆண்டில் குருந்துவத்தை பொலிஸ் நிலையத்தில் தனது பணியைத் தொடர்ந்த இவர்,கொழும்பு பல்கலைக்கழகத்திற்குச் சென்று வெளிவாரியாக கலைப்பட்டத்துறையைத் தொடர்ந்து, முதல் முயற்சியிலேயே மிக உயர்ந்த பெறுபேற்றுடன் தேர்ச்சி பெற்று, சட்ட பீடத்திற்குத் தகுதி பெற்றார்.

பிரியந்த வீரசூரிய தனது பட்டப்படிப்பை முடித்த பின்னர் உதவி பொலிஸ் அதிகாரசபை பரீட்சையில் தோற்றி, அதிலும் வெற்றி பெற்றார்.

அதன் பின்னர் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட பிரியந்த வீரசூரிய, பின்னர் பொலிஸ் சேவையில் ஆர்வம் காட்டி படிப்படியாக முன்னேறி, சிரேஷ்ட பிரதிப்பொலிஸ் மாஅதிகாரியாக பதவி உயர்வு பெற்றார். 

புதிய ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க நியமனம் பெற்றபோது, ​​ஐஜிபியின் பணியைக் கவனிக்க,  காவல்துறை அதிகாரியாக இருந்த தேஷபந்து தென்னகோன்  நீதிமன்ற உத்தரவுப்படி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், பொலிஸ் மா அதிபராக ஒருவரை நியமிப்பது ஜனாதிபதியின் பாரிய பணியாகியது!

அதற்குத் தகுதியானவர்கள் யார் என்பது குறித்த விசாரணையின்போது, மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் பெயர் அதிகமாகப் பேசப்பட்டது!

இந்தக் குறிப்பில் முதலில் கூறியது போல், நேர்மை, காவலராகப் பெற்ற அனுபவங்கள், படிப்படியான பதவி உயர்வுகள், பல்வேறு அதிகாரிகளுடன் சுமுகமாகப் பணிபுரிதல் மற்றும் உயர் கல்வித் தகுதிகள் போன்ற காரணங்களால் இப்பதவிக்கு நியமனம் பெற்றுள்ள இவரை நாமும் வாழ்த்துகின்றோம்!

செம்மைத்துளியான்



 



Post a Comment

Previous Post Next Post