Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவில் வாக்குப் பெட்டிகளுக்கு தீ வைப்பு

அமெரிக்காவில் வரும் நவம்பர் 5 ஆம் திகதி அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஆளும் ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிசும் குடியரசுக் கட்சி சார்பில் டொனால்ட் டிரம்ப்பும் களத்தில் உள்ளனர். இந்நிலையில் சிறப்புரிமை மூலம் தபால் ஓட்டு உள்ளிட்ட, முன்கூட்டியே வாக்களிக்கும் நடைமுறைகளின் படி ஏற்கனவே கணிசமான அளவு வாக்குகள் பதிவாகி வருகின்றன. அதன்படி அதிபர் ஜோ பைடனும் தனது வாக்கினை செலுத்தினார்.

இந்நிலையில் வாக்குகளுடன் கூடிய வாக்குப் பெட்டிகள் மர்ம நபர்களால் எரிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒரேகான் மாகாணத்தில் உள்ள போர்ட்லாண்ட் பகுதியில் உள்ள 2 வாக்குப் பெட்டிகளுக்கு தீவைக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தலைநகர் வாஷிங்க்டன் மாகாணத்தில் உள்ள வான்கூவர் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பெட்டிகளுக்கும் தீ வைக்கப்பட்டுள்ளது.

இரு சம்பவங்களிலும் தீயணைத்துப்புத்துறை துரிதமாக செயல்பட்டு தீயை அனைத்தது. இருப்பினும் உள்ளே இருந்த நூற்றுக்கணக்கான வாக்குச்சீட்டுகள் தீயில் புகைந்து சேதமடைந்தன. இதனால் சொற்ப வாக்குச்சீட்டுகளை மட்டுமே சேதமின்றி மீட்க முடிந்ததது.

இதனையடுத்து இந்த சம்பவங்கள் குறித்து எப்.பி.ஐ. விசாரித்து வருகிறது. இரண்டு சம்பவங்களும் ஒரே மாதிரியாக நடந்துள்ளதால் இதை செய்தது ஒரே கும்பலா என்ற கோணத்தில் விசாரணை தொடங்கியுள்ளது.

இதற்கிடையே செலுத்தப்பட்ட வாக்குகளை மீண்டும் உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் தேர்தல் நேர வன்முறை கண்டிக்கத்தக்கது என்றும் அரசு சார்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

itnnews




 Ai SONGS

 



Post a Comment

0 Comments