Ticker

6/recent/ticker-posts

கல்வி அமைச்சின் அதிரடி அறிவிப்பு

நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலையால், இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின், அதிரடியான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அதிகாரத்தை கல்வியமைச்சு வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், வெள்ளம் மற்றும் ஏனைய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுமாயின் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரம், மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை தொடர்பில் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ குழுவுடன் கலந்துரையாடியதன் பின்னரே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

tamilmirror



 



Post a Comment

0 Comments