உச்சமடையும் போர்: சீனா அதன் குடிமக்களை லெபனானிலிருந்து வெளியேற்றியது

உச்சமடையும் போர்: சீனா அதன் குடிமக்களை லெபனானிலிருந்து வெளியேற்றியது

சீனா அதன் குடிமக்கள் 215 பேரை லெபனானிலிருந்து வெளியேற்றியிருக்கிறது.

சென்ற மாதத்திலிருந்து இஸ்ரேல் அங்கு நடத்திவரும் மனிதாபிமானமற்றதும் பயங்கரமானதுமான தாக்குதல்களால் சுமார் 1,100 பேர் மாண்டனர்.

ஹிஸ்புல்லா போராளிகள் வலுவாக இருக்கும்
தென் லெபனானில் இஸ்ரேலிய ராணுவப் படைகள் தரைவழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.

அண்மையில் இஸ்ரேல் லெபனானுடனான அதன் வட எல்லையைத் தற்காப்பதில் கவனத்தைத் திருப்பியிருக்கிறது.

தரைவழித் தாக்குதல்களால் தென்கொரியா, ரஷ்யா, பிரான்ஸ், ஸ்பெயின், ஜெர்மனி, பிரிட்டன் உள்ளிட்ட பல நாடுகள் அவற்றின் குடிமக்களை லெபனானிலிருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.

அங்கு போர் பதற்றம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது.

nambikkai



 



Post a Comment

Previous Post Next Post