நாடாளுமன்ற தேர்தல் : வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்த கதி

நாடாளுமன்ற தேர்தல் : வரலாற்றில் ஐக்கிய தேசிய கட்சிக்கு நேர்ந்த கதி

டி.எஸ்.சேனநாயக்க(D.S. Senanayake) ஐக்கிய தேசிய கட்சியை நிறுவியதிலிருந்து கட்சியின் வரலாற்றில் தலைவர் உட்பட முக்கிய அதிகாரத்தில் உள்ள நால்வர் நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடாமல் விலகுவது இதுவே முதல்முறை என தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலில் தலைவர், பிரதித் தலைவர், தவிசாளர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகிய நான்கு முக்கிய பதவிகளில் உள்ளவர்கள் போட்டியிடவில்லை.

நால்வர் போட்டியிலிருந்து விலகினர்

கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), பிரதித் தலைவர் அகிலவிராஜ் காரியவசம்(Akila Viraj Kariyawasam), தவிசாளர் வஜிர அபேவர்தன(Vajira Abeywardena), பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார(Palitha Range Bandara) ஆகியோர் இம்முறை தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து விலகியுள்ளனர்.

எனினும் நிர்வாக செயலாளர் ரவி கருணாநாயக்க(Ravi Karunanayake) தேசியப்பட்டியலில் உள்வாங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சஜித்தின் வெற்றியை தடுத்த ரணில்

ஐக்கிய தேசியக் கட்சியின்  முக்கிய தலைவர்கள் எவரும் போட்டியிடத் தீர்மானிக்காத நிலையில், இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் ஒரு குறிப்பிடத்தக்கமாற்றம் ஏற்பட்டுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

கடந்த ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிட்ட போதும், தனக்கான வெற்றியை உறுதி செய்வதை விட சஜித் பிரேமதாசவின் வாய்ப்புகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதிலேயே அவரது வேட்புமனு அதிக கவனம் செலுத்தியதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ibctamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post