போட்டி நிறுவனங்களின் செயலிகளுக்கு Google playstoreஇல் இடம்தர வேண்டும்: Googleக்கு நீதிமன்றம் உத்தரவு

போட்டி நிறுவனங்களின் செயலிகளுக்கு Google playstoreஇல் இடம்தர வேண்டும்: Googleக்கு நீதிமன்றம் உத்தரவு

Google தனது Play Store செயலிப் பதிவிறக்க தளத்தில் போட்டி நிறுவனங்களின் செயலிகளுக்கும் இடம்தர வேண்டுமென அமெரிக்க நீதிபதி ஒருவர் தீர்ப்பளித்துள்ளார்.

அதேபோல Googleஇன் Play Storeஇல் உள்ள செயலிகளும் மற்ற நிறுவனங்களின் செயலிப் பதிவிறக்கத் தளத்தில் இடம்பெற வேண்டும் என்று அவர் உத்தரவிட்டார்.

அடுத்த மாதம் தொடங்கி 3 ஆண்டுகளுக்கு இந்த உத்தரவு நீடிக்குமென நீதிமன்றம் தெரிவித்தது.

Fortnite காணொலி விளையாட்டை உருவாக்கிய Epic Games நிறுவனம் Google மீது தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

இந்த மாற்றம் வாடிக்கையாளர்களின் அந்தரங்கத்திற்கும் பாதுகாப்பிற்கும் ஆபத்தை ஏற்படுத்துமென Google கூறுகிறது.

சட்ட வல்லுநர்கள் இந்த உத்தரவை வரவேற்றுள்ளனர். இதனால் முன்னனித் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் போக்கு மாறுமென்று அவர்கள் நம்புகின்றனர்.

காலப்போக்கில் வாடிக்கையாளர்கள் செயலிகளுக்குச் செலுத்தும் கட்டணமும் குறைய இந்த மாற்றம் வழிவகுக்கும் என்று நம்பப்படுகிறது.

nambikkai




 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post