Ticker

6/recent/ticker-posts

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இத்தாலி அரசு தடை

வெளிநாடுகளுக்குச் சென்று வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதற்கு இத்தாலி அரசு தனது தடையை விரிவுபடுத்தியுள்ளது.

இத்தாலியில் வாடகைத் தாய் முறைக்கு கடந்த 2004-ஆம் ஆண்டிலிருந்தே தடை உள்ளது. இருந்தாலும், அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளுக்குச் சென்று அங்கு வாடகைத் தாய் மூலம் அந்த நாட்டவா்கள் குழந்தைகளைப் பெற்றுவந்தனா்.இந்தச் சூழலில், தனது வாடகைத் தாய் முறையை வெளிநாடு சென்று பயன்படுத்துவதற்கும் இத்தாலி அரசு தடை விதித்துள்ளது.

இது தொடா்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் (படம்), முழு தடைக்கு ஆதரவாக 84 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. அதையடுத்து, 

வெளிநாடுகளில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவதையும் குற்றமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.மக்களிடையே பழமைவாதத்தை திணிப்பதாகவும், சம பாலின தம்பதியருக்கு விரோதமாக இருப்பதாகவும் இந்த சட்டத்துக்கு பலத்த எதிா்ப்புகள் எழுந்தன. அவற்றையும் மீறி, பிரதமா் ஜாா்ஜியா மெலோனி தலைமையிலான தீவிர வலதுசாரி அரசு அந்தச் சட்டத்தை தற்போது நிறைவேற்றியுள்ளது. 

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments