Ticker

6/recent/ticker-posts

திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-164


குறள் 458
மனநலம் நன்குடைய ராயினும் சான்றோர்க்கு
இனநலம் ஏமாப் புடைத்து.

எவ்வளவு தான் மனசு நல்லாயிருந்தாலும், சேர்ந்து இருக்க இனம் தான் கூடுதல் பாதுகாப்பு தரும். 

குறள் 460
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்.

நல்லவங்களோட சேர்ந்து இருக்கதை விட ஒசத்தியான துணை வேற எதுவும் கெடையாது. அதே மாதிரி கெட்டவங்களோட சேர்ந்து இருக்கதை விட மோசமான   தும்பம் எதுமே கெடையாது. 

குறள் 461
அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும்
ஊதியமும் சூழ்ந்து செயல்.

ஒரு வேலையை செய்யதுக்கு முந்தி அதுனால ஆதாயம் வருமா இல்லை நட்டம் வருமான்னு  நல்லா அலசி ஆராயணும். வேலை முடிஞ்சதும் வரக்கூடிய பலன் என்னன்னு பாத்த பொறவு தான் அதை செய்யணும். 

குறள் 462
தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்.

நல்ல சேக்காளிகளோட சேர்ந்து, என்ன செய்யப்போறோங்கிறதைப் பத்தி அவங்க கிட்டயும் கலந்து பேசி, நம்மளும் நல்ல யோசிச்சு ஒரு வேலையைச் செஞ்சா, முடியாததுன்னு  ஒண்ணுமே கெடையாது. 

குறள் 464
தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும்
ஏதப்பாடு அஞ்சு பவர்.

நமக்கு கெட்ட பேரு வந்திரும்னு நெனைச்சு பயப்புடுதவங்க,  எந்த ஒரு கெட்ட செயலையும் செய்யத் தொடங்க மாட்டாங்க. 

 (தொடரும்)     



 Ai SONGS

 



Post a Comment

0 Comments