வெற்றியை பறித்த சுமாரான தீர்ப்பு.. 3 – 0 என வீழ்ந்த இந்தியா வரலாறு காணாத தோல்வி.. நியூஸிலாந்து உலக சாதனை

வெற்றியை பறித்த சுமாரான தீர்ப்பு.. 3 – 0 என வீழ்ந்த இந்தியா வரலாறு காணாத தோல்வி.. நியூஸிலாந்து உலக சாதனை


இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்ற நியூஸிலாந்து ஆரம்பத்திலேயே தொடரை கைப்பற்றியது. அந்த நிலையில் மூன்றாவது போட்டி நவம்பர் ஒன்றாம் தேதி மும்பையில் துவங்கியது. அதில் டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 235 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டேரில் மிட்சேல் 82 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் விளையாடிய இந்தியா போராடி 263 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுப்மன் கில் 90, ரிஷப் பண்ட் 60 ரன்கள் எடுத்த நிலையில் நியூசிலாந்துக்கு அதிகபட்சமாக அஜஸ் படேல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதன் பின் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் விளையாடிய நியூஸிலாந்து இரண்டாவது இன்னிங்ஸில் 174 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக வில் எங் 51 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 147 ரன்களை துரத்திய இந்தியாவுக்கு கேப்டன் ரோஹித் சர்மா 11, சுப்மன் கில் 1, விராட் கோலி 1 ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதே போல ஜெய்ஸ்வால் 5 ரன்களில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த சர்பராஸ் கான் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினார்.

அதன் காரணமாக 29-5 என ஆரம்பத்திலேயே சரிந்த இந்தியாவுக்கு ரிஷப் பண்ட் தம்முடைய ஸ்டைலில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் ரவீந்திர ஜடேஜா 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். இருப்பினும் தொடர்ந்து மறுபுறம் அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 (57) ரன்களில் அஜஸ் படேல் சுழலில் சர்ச்சைக்குரிய முறையில் அவுட்டாகி சென்றார்.

குறிப்பாக பந்து அவருடைய பேட்டில் உரசுவது போல் அல்ட்ரா எல்ஜி தொழில்நுட்பத்தில் தெரிந்தும் மூன்றாவது நடுவர் எல்பிடபிள்யூ முறையில் அவுட் கொடுத்தது இந்தியாவுக்கு பெரிய பின்னடைவை கொடுத்தது. ஏனெனில் அடுத்து வந்த அஸ்வின் 8, சுந்தர் 12 ரன்களில் அவுட்டானதால் இந்தியாவை 121 ரன்களுக்கு சுருட்டிய நியூசிலாந்து 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதன் வாயிலாக 3 – 0 (3) என்ற கணக்கில் நியூசிலாந்து இத்தொடரை வென்று சரித்திரம் படைத்துள்ளது. குறிப்பாக இந்தியாவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரில் ஒய்ட்வாஸ் செய்த அணியாக நியூசிலாந்து உலக சாதனை படைத்துள்ளது. அந்த அணிக்கு அதிகபட்சமாக அஜாஸ் பட்டேல் 6 விக்கெட்டுகளை எடுத்தார். மறுபுறம் முதல் முறையாக இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் 3 போட்டிகள் கொண்ட ஒரு டெஸ்ட் தொடரில் ஒய்ட்வாஷ் தோல்வியை பதிவு செய்து வரலாறு காணாத தோல்வி சந்தித்துள்ளது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடத் துவங்கிய 93 வருடங்களில் ஒய்ட்வாஷ் தோல்வியே சந்தித்ததில்லை என்ற கௌரவ சாதனையை இந்தியா இன்று காற்றில் பறக்க விட்டது.

crictamil



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post