LignoSat என்ற துணைக்கோள் வரும் செவ்வாய்க்கிழமை விண்வெளிக்கு அனுப்பப்படும்.
அதன் எடை ஒரு கிலோகிராமுக்கும் குறைவு என்று கூறப்பட்டது.
கியோட்டோ பல்கலைக்கழக ஆய்வார்கள் ஆணிகளோ பசையோ இல்லாமல் பாரம்பரிய முறையில் துணைக்கோளைத் தயாரித்துள்ளனர்.
சுமிட்டோமோ நிறுவனம் தேவையான மெக்னோலியா மரக்கட்டைகளை வழங்கியது.
துணைக்கோளை உள்ளங்கையில் அடக்கிவிடலாம்.
பசுமைக்கு உகந்த முறையில் விண்வெளி ஆராய்ச்சி சாத்தியம் என்பதை அது எடுத்துக்காட்டுகிறது.
விண்ணில் செலுத்தப்படும் துணைக்கோள்கள் மண்ணில் விழுந்தால் அதன் உலோகப் பாகங்கள் சுற்றுப்புறத்துக்குக் கேடு விளைவிக்கலாம்.
மண்ணைவிட விண்ணுக்கு உகந்தது மரக்கட்டை.
அது மக்கிப்போகத் தண்ணீரோ உயிர்வாயுவோ அங்கில்லை.
எவ்வளவு நாள் தாக்குப்பிடிக்கும் என்பதை மதிப்பிட LignoSat துணைக்கோள் 6 மாதம் விண்வெளியில் இருக்கும்.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments