Ticker

6/recent/ticker-posts

பால் குடிக்க மறுக்கும் குழந்தைகளுக்கு... கேரட் பாயாசம் இப்படி செய்து கொடுங்க


இயற்கையாகவே இனிப்பு சுவை கொண்ட அன்றாடம் கிடைக்கக்கூடிய விலை மலிவான அதேசமயம் ஊட்டச்சத்துக்கள் செறிந்து காணப்படும் காய்கறிகளுன் ஒன்று தான் கேரட்.

நமது உடலுக்கு ஆரோக்கியத்தையும், சருமத்திற்கு அழகையும் ஒருங்கே கொடுக்கக்கூடியது கேரட், இதில் நம் உடலுக்கு தேவையான விட்டமின்கள், கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட்டை பயன்படுத்தி செய்யப்படும் உணவுகள் சிறந்த தெரிவாக இருக்கும். இதில் கால்சியம் இருப்பதால் எளிதில் ஜீரணமாகும்.

அந்த வகையில் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கேரட்டை பயன்படுத்தி சுவையான கேரட் பாயாசம் எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் 

கேரட் - 5

பால் - 1 கப்

பொடியாக நறுக்கிய தேங்காய்- சிறிதளவு

வெல்லம் - தேவையான அளவு 

நெய் - தேவையான அளவு

முந்திரி - 10 - 15

உலர் திராட்சை - 8 - 10

ஏலக்காய் தூள் - சிறிதளவு

செய்முறை 

முதலில் கேரட்டை சுத்தம் செய்து பொடியாக துருவி எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் பாத்திரமொன்றை அடுப்பில் வைத்து  நெய் ஊற்றி சூடானதும் துருவிய கேரட்டை போட்டு நன்றாக வதக்கி தனியாக எடுத்து ஆறவிட வேண்டும். 

பின்னர் ஆறவைத்த கேரட்டை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

அதன் பின்னர் அடுப்பில் பாத்திரமொன்றை வைத்து நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, உலர் திராட்சை மற்றும் பொடியாக நறுக்கிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை நன்றாக வறுத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் அதில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் இனிப்பிற்கேற்ப நுணுக்கிய வெல்லம் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.

நன்றாக கொதித்த நிலையில் கேரட் கலவையை  அதில் சேர்த்து நன்றாக கிளறிவிட வேண்டும். பின்னர் அதனுடன் 1 கப் பால் சேர்த்து கொதித்தவுடன் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்துக்கொள்ள வேண்டும். 

இறுதியாக சிறிதளவு நெய் ஊற்றி கிளறி இறக்கினால் சுவையான கேரட் பாயாசம் தயார். இது இனிப்பாக இருந்தாலும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானதாக இருக்கும்.

manithan


 



Post a Comment

0 Comments