எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக இரண்டு முனைகளிலும் போர் நிறுத்தத்தை உறுதிப்படுத்தும் பணியில் அமெரிக்க தூதர்கள் ஈடுபட்டுள்ளனர்.
எனினும், ஹமாஸ் தற்காலிக போர்நிறுத்தத்தை ஆதரிக்கவில்லை என்று அதன் அல்-அக்ஸா ஹமாஸ் என்ற தொலைக்காட்சி தெரிவித்துள்ளது.
காசாவில் ஓராண்டு நீடித்த போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் மற்றும் இஸ்ரேலிய படைகளை அங்கிருந்து திரும்பப் பெற வேண்டும் என்ற நிபந்தனைகளை போர்நிறுத்த முன்மொழிவுகள் நிறைவேற்றவில்லை என்பதே இதற்கான காரணம் என்று அல் அக்ஸா ஹமாஸ் கூறியுள்ளது.
முன்னதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், எந்தவொரு அழுத்தம் அல்லது கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும் பாதுகாப்பை நடைமுறைபடுத்துவதே தனது முன்னுரிமை என்று கூறியிருந்தார்.
இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதர்களான அமோஸ் ஹோச்ஸ்டீன் மற்றும் பிரட் மெக்குர்க் ஆகியோருக்கு அவர் இந்த செய்தியை தெரிவித்ததாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே, காசா பகுதியில் ஹமாஸ் மற்றும் லெபனானில் ஹிஸ்புல்லாவிற்கு எதிராக இஸ்ரேல் தனது இராணுவ தாக்குதல்களை நேற்று வெள்ளிக்கிழமை மீண்டும் ஆரம்பித்தது.
இதன்படி, காசாவின் மத்தியப் பகுதியில் உள்ள டெய்ர் அல்-பாலா நகரம், நுசிராத் முகாம் மற்றும் அல்-ஜவேதா நகரம் ஆகியவற்றின் மீது இஸ்ரேலிய தாக்குதல்களில் வெள்ளிக்கிழமை காலை வரை சுமார் 64 பேர் கொல்லப்பட்டனர் என்று காசாவில் உள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், பெய்ரூட்டின் தெற்கு புறநகர்ப் பகுதிகளில் குறைந்தது 10 முறை தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன குறித்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு, வெளியேற்ற உத்தரவுகளை வழங்கியதை அடுத்தே, இஸ்ரேல் இந்த தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அந்தவகையில், நவம்பர் 5இல் அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் ஒரு போர்நிறுத்தம் எட்டப்படலாம் என்ற நம்பிக்கை தற்போது தகர்த்துப்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
tamilwin
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
உலகம்