குறள் 1314
யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
யாரினும் யாரினும் என்று.
நம்முடைய நட்பு
எனக்கு மகிழ்ச்சியாக
இருக்குடி! காவியா!
யார் யாரையோவிட
நம்நட்பு அருமைதானடி!
ஏய்! ஓவியா!
யாரைவிட யாரைவிட
சொல்லிரு! எனக்கு
மனசு கொந்தளிக்குது!
சொல்லிரு!
இல்ல உன்னோட
பேசவேமாட்டேன்!
ஆமா!
குறள் 1315
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
என் அன்புத் தோழியே!
கண்ணம்மா?
ஏனம்மா இப்படி அழுகின்றாய்?
இந்தப் பிறவியில் நாம்
பிரியமாட்டோம் என்றுதானே
சொன்னேன்! தப்பாகசொல்லவில்லையே! தோழி!
அம்மா பொன்னம்மா
அப்ப அடுத்தபிறவியிலே
பிரிஞ்சிடுவேன்னு
சொல்றயா!
சரிம்மா தப்புதாயே!
சொல்லல! போதுமா!
குறன் 1316
உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர்
என்றென்னைப் புல்லாள் புலத்தக் கனள்.
வாம்மா மலர்விழி!
நினைத்தேன் வந்தாய்
நூறுவயதுன்னு
பாடனும்போல இருக்கு!
நீயோ அஞ்சாவது படிக்கிற
தேர்வுஎப்படி எழுதுனியோன்ணு
உன்னைத்தான் இப்பத்தான்
நெனச்சேன்வந்துட்ட!
அப்ப இவ்வளவுநேரமா
மறந்திருந்தீங்க போல இருக்கு
கயல்விழிஅக்கா!
அப்படித்தானே!
போங்க! உங்களோட பேசமாட்டேன்!
என்னடா நட்புக்கு வந்த சோதனை!
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments