Ticker

6/recent/ticker-posts

புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-37


மறுநாள் உரிய நேரத்திற்கு இருவரும் வேரடிக்கு வந்து சேர்ந்தார்கள்!

இர்வின் தனது இரு சக்கர வண்டியில் வந்திறங்கினான்!

காலத்தை வீணாக்காமல் செரோக்கியை வண்டியில் ஏற்றிவிட்டு இர்வின் பின்னால் ஓடத்தொடங்கினான்! வெகுதூர ஓட்டத்தின் பின்னர்,  தனியாக வண்டியை ஓட்டும் நிலைக்கு செரோக்கி வந்துவிட்டதை இர்வின் புரிந்துகொண்டான். 

இர்வின் ஓரிடத்தில் இளைப்பாறிக் கொண்டிருக்கையில் செரோக்கி மட்டும் தனியாக வண்டியில் ஏறி புல்வெளி வரைக்கும் சென்று வந்தான்.

இப்படியாகப் பலமுறைகள் போயும், வந்தும் கொண்டிருந்தவன் களைப்பு மிகுதியால், இர்வின் உட்கார்ந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து ”ட்ரீங்ங்ங் .... ட்ரீங்ங்ங்” என்று மணியோசை எழுப்பியவாறு வண்டியை நிறுத்தி இறங்கினான் - இர்வினிடத்தில் நெருங்கிப்போய்  அவனது கரங்களைப் பிடித்தவாறு  கூனிக்குறுகித் தனது நன்றியைத் தெரிவித்தான்! 

மகிழ்ச்சி மிகுதியால் இருவரும் ஒருவரை ஒருவர் தழுவிக் கொண்டனர். அதன் பிறகு செரோக்கியை வண்டியில் அமர்த்திக் கொண்டு இர்வின் வேகமாக வேரடியை வந்தடைந்தான்!

அங்கிருந்த வேரொன்றில் உட்கார்ந்து கொண்ட இர்வின் தனது பைக்குள்ளிருந்து ஓர் அட்டையை எடுத்து, எழுந்து நின்றவனாக தனது இரு  கரங்களாலும் அதனை செரோக்கியிடம் நீட்டினான்! 

செரோக்கியும் பதிலுக்கு தன் இரு கரங்களையும் நீட்டி அந்த அட்டையை வாங்கிக் கொண்டவனுக்கு, அதன் முகப்ப்புப் படத்தைக் கண்டதும்  அதிர்ந்து போனான்!

தற்போதைய தனது வாழ்விடமான- “மூத்தவர்” வாழ்ந்த குகை அட்டையிலிருந்தது!

இர்வின் தனது பல்கலைக் கழகத்தேர்வை முடித்துக் கொண்டு முதுநிலை மேற்படிப்பிற்கான ஆய்வுக்காக “அமேசன் நதிக்கரைவாழ் பழங்குடிகள்” என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருந்தான்!

அடுத்த மாதம் தனது ஆய்வுக் கட்டுரையை அமாசோனாஸ் பல்கலைக் கழகத்தில் சமர்ப்பிக்க இருக்கும் இர்வின் - அந்த வைபவத்திற்கு செரோக்கியினதும், ரெங்க்மாவினதும் வருகையை அன்புடன் எதிர்பார்ப்பதாக அழைப்பிதழின் உள்ளீட்டில் அழகான வடிவெழுத்துக்களில் பொறிக்கப்பட்டிருந்தது! 

செரோக்கிக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை! இர்வின் தன்னையும் ஒரு மனிதனாக மதித்து கல்விமான்கள் - பிரமுகர்கள் வருகை தரும் பிரமாண்டமானதொரு வைபவத்திற்கு அழைத்திருப்பது அவனது பெருந் தன்மையைக் காட்டுகின்றது! தான் ரெங்க்மாவையும் அழைத்துக் கொண்டு மனாஸ் நகருக்கு வருவதற்கு அவன் உடனே  சம்மதம் தெரிவித்தான்!

(தொடரும்)

செம்மைத்துளியான்



 Ai SONGS

 



Post a Comment

0 Comments