கரிகாற் சோழனுக்கும், சேரலாதனுக்கும் கிட்டத்தட்ட ஒரு நூறாண்டு காலம் இடைவெளியுள்ளதை நாம் உணர வேண்டும்.
இக்கரிகாற் பெருளத்தானுக்குத் தந்தை 'சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி' என்ற செய்தியை "உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அழுந்தூர் வேளிடை மகட்கோடலும் "அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலும், அவன் மகனாகிய கரிகாற் பெருவளத்தான் நாங்கூர் வேளிடை மகட்கோடலுங் கூறுவர்" என தொல்காப்பியப் பொருளதிகார நச்சினார்க்கினியார் உரை வழி அறிகின்றோம்.
இவ்வரசனைப் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவரும் புறநானூற்றின் 266-ஆம் பகுதியில் பாடியுள்ளார். இப்புலவரே "வையாவிக் கோப் பெரும் பேகன்' எனும் அரசனையும் பாடியுள்ளார்.
இவ்வரசன் கடையேழு வள்ளல்களில் ஒருவன். கபிலரும் இப்பேகனைப் புறநானூற்றில் பாடியுள்ளார். இது நிற்க. சேரன் செல்வக்கடுங் கோவாழியாதனைப் பற்றி, கபிலர்,ஏழாம் பத்துப் பாடிப் பரிசில் பெற்றார் என்ற செய்தி பதிற்றுப் பத்தில் காணப்படுகிறது.
இதனால், கபிலரும் செல்வக் சுடுங்கோவாழியாதன் மற்றும் உருவப்பஃ றேரிளஞ் சேட் சென்னி ஆகியோர், ஏறத்தாழ ஒரே காலத்தினர் என்பது நமக்கு விளங்குகிறது. சேரன் செல்வக் கடுங்கோ கி.மு. 36 ஆம் ஆண்டு அரியணை ஏறினான் என்பதனால் இவர்களெல்லாம் கி.மு.முதல் நூற்றாண்டின் இடையில் தாம் வாழ்ந்துள்ளனர் என்பது புலனாகிறது.
கி.மு.முதல் நூற்றாண்டின் இடையில் வாழ்ந்த செல்வக் கடுங்கோவின் புதல்வன் சேரன் பெருஞ்சேரலிரும்பொறை, கடையேழு வள்ளல்களில் ஒருவரான 'அதியமான் அஞ்சி' யொடு தகடூரில் போரிட்டான் என்ற செய்தியை "தகடூர் எரிந்து, நொச்சி தந்து எய்திய அருந்திறல் ஒள் இசைப் பெருஞ்சேரல் இரும்பொறை"என பதிற்றுப் பத்தில் அரிசில் கிழாரின் எட்டாம் பத்தால் அறிகின்றோம்.
மன்னன் அதியமானஞ்சியும், இவனைப் பற்றிப் புறநானூற்றில் பாடிய ஒளவையாகும். சுடுங்கோவைப் பாடிய கபிலரும் ஒரே காலத்தினர்.
இந்நிலையில், தாம் திருவள்ளுவரின் காலத்தை அறிந்து கொள்ள, ஒளவையாரால் பாடப்பட்ட, 'கானப் பேரெயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்னும் மன்னனது காலம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியமாகும்.
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments