Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-65


330.வினா : வேந்தன் வலிமை தேய்க்கும் அரம் எது?
விடை: கடுஞ்சொல்லும் மீறிய தண்டனையும் 
கடுமொழியும் கையிகந்த தண்டமும் வேந்தன் அடுமுரண் தேய்க்கும் அரம்.(567)

331:வினா:எதில் உள்ளது உலகியல்?
.விடை: உற்று நோக்கலில் 
கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை.(572)

332.வினா: கண்ணிற்கு அணிகலம் எது?
விடை:உற்று நோக்கல் 
கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும்.(575)

333.வினா:நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் குணம் யாது?
விடை: ஞ்சையும் மகிழ்வுடன் ஏற்பர். 
பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்.(580)

334.வினா: மன்னவனுக்கு இரு கண் போன்றது எது?
விடை: ஒற்றரும், சிறப்பான நூல்களும் 
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண்.(581)

(தொடரும்)


 Ai SONGS

 



Post a Comment

0 Comments