கோட்டை
சேர்ந்திடும் கோட்டையில் சூழ்ந்து
(இன்னிசை வெண்பா அந்தாதி)
கோட்டையைக் காத்தல் குடிகாத்தல் தானன்றோ
ஏட்டுப் புலவர் இனிதுரைத்தார்; எஞ்ஞான்றும்
நாட்டினில் வீரர் நலம்பெறும் கோயிலெனக்
காட்டிடும் கோட்டையைக் காண்:
காண்பவர் உள்ளம் களித்து மகிழ்ந்திடும்
தூண்பல கொண்டு திகழ்ந்துயரும்;நாட்டினர்
போற்றிப் புகழ்ந்து புதுநிலை கொள்வரே
ஆற்றுப் படுத்தும் அழகு:
அழகினில் ஓங்கி அடர்ந்திடும் காட்சி
முழங்கிடும் வீரம் முகிழ்த்தெழ மேவிடும்
ஆற்றல் படைத்திட ஆணைகள் கூவிட
ஏற்குமே கோட்டை எழில்:
எழில்கூட்ட என்றும் இயங்கி உலகில்
வழிவழி ஆளும் வரலாறு தான்படைக்கும்
நீதி வழுவா நெறிமுறை தானோங்கும்
சோதியே கோட்டைச் சுடர்:
சுடரும் ஒளியாய்ச் செயல்படும் மன்னர்
தொடரும் தகைமையால் தூய்மை;அடலேறாய்
ஆர்த்து நிறைந்த அறிவுப் புலமையைச்
சேர்த்திடும் "கோட்டையில்"
சூழ்ந்து:
தாமஸ் ஆல்வா எடிசன்
"வளியாய்த் திகழ்ந்த வனப்பு"
(நேரிசை வெண்பா)
ஆல்வா எடிசன் அருளொளிர்ந்த
சால்பாம் சரித்திரச் சான்றோனே--
ஏலும்
ஒளியால் உலகை உயர்ந்திட வைத்த
வளியாய்த் திகழ்ந்த வனப்பு:
(தொடரும்)
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
Tags:
செந்தமிழ் இலக்கியம்