ராஜகுமாரியின் சுயம்வரம்-56

ராஜகுமாரியின் சுயம்வரம்-56


குமரன் கவிதையாலே மூத்த மருத்துவருக்கு சாட்டை வீசிவிட்டான்.
 
இதை உணர்ந்து கொண்டோரும் உண்டு. ஏதோ கவிதை தானே என்று ரசித்தோரும் உண்டு. கூட்டத்தின் உள்ளே. எப்படியோ அனைவரும் உறங்கி விட்டனர் .

குமரன் உறங்கினாலும் சிந்தனை வேலை செய்து கொண்டே இருந்தது. அப்படியும் இப்படியுமாய் இரவைக் கழித்து விட்டார்கள்  .காலைக் கடன் முடித்துக் குளித்துக் கொண்டு இருக்க காவளர் வந்து குமரனை அழைத்தார்.

"தங்களை மகாராணி சந்திக்க வரும் படி கட்டளை இட்டுள்ளார் வாருங்கள் செல்வோம்" எனக் கூறி முடித்து விட்டுக் குமரனுக்காகக் காத்திருந்தான் காவளர். 

அப்போது மூத்த மருத்துவர் வந்து கேட்டார் காவளரிடம் "என்ன மகாராணி குமரன் மேல் கோபமாய் இருக்கின்றார்களா?"என்று .

அதற்கு  அந்தக் காவலர் திரும்பிக் கேட்டார் "ஏன் ஐயா இப்படி ஓர் ஐயம் தாங்களுக்கு அப்படி ஏதும் இல்லை. " என்றவன் குமரன் வருவதைப் பார்த்ததும் புறப்படத் தயாரானான். குமரனும் மூத்த மருத்துவரைப் பார்த்துச் சிரித்து விட்டுப் புறப்பட்டான்.

மூத்தவர் முணுமுணுப்புக் குறையாமலே உள்ளே நுழைந்தார். அதே நேரம் பானு மீனா இருவரும் எப்போ வருவார் மருத்துவர் என்னும் எதிர் பார்ப்போடு வழி பார்த்த வாறே தூங்கிக் கொண்டு விழுவதும் எழுவதுமாக இருந்தார்கள். 

சற்று நேரத்தில் மகாராணி இருக்கும் இடத்தை நெருங்கி விடவே குமரனுக்குத் தயக்கமும் படபடப்பும் வந்தது.

"நில்லுங்கள் மருத்துவரே மகாராணி அழைத்ததும் நாம் நுழைவோம்" எனக் கூறி நிறுத்தினான் உடன் சென்ற காவலன் .

அப்போது அழைப்பு வரவே குமரனை மாத்திரம் அனுப்பி விட்டுக் காவலன் வெளியே நின்று விட்டான்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

Previous Post Next Post