Ticker

6/recent/ticker-posts

கொழும்பு வாழ் முஸ்லிம் மக்களே!... முஸ்லிம் பிரதிநிதித் துவத்தை பாதுகாப்போம்!


ஜானதிபதித் தேர்தல் முடிந்து விட்டது. ஊழல், மோசடி, இனவாதம் போன்றவற்றினால் வெறுப்படைந்த மக்கள்  நாட்டில் புதிய ஒரு மாற்றத்தை விரும்பினார்கள். 

மாற்றம் ஏற்பட்டது. மாற்றத்தில் எமது முஸ்லிம் மக்கள் சுமார்  8 லட்சம் வாக்குகளை அள்ளி வழங்கி இம்மாற்றத்தில் பங்கு கொண்டனர்.

புதிய ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டார். இது வரையில் எந்த இனத்திற்கும்  இடையூறு  இன்றி நாட்டை கொண்டு செல்கிறார். ஊழலை அழித்தொழிக்க உறுதி  பூண்டுள்ளார்.

நல்ல முறையில் நாட்டை கொண்டு சென்றால் அனைத்து மக்களினதும் ஆதரவு அவருக்கு கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்தில்லை.

தற்போது பாரளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.  நாம் முஸ்லிம்கள் இந்த நாட்டின் சிறு பான்மை மக்கள் என்ற வகையி்ல் கடந்த கால நிகழ்வுகளை சிந்தித்து இந்த முறை பாராளுமன்ற வாக்கை ஆழமாக சிந்தித்து  வாக்களிக்க வேண்டும்.

பல்லின மக்கள் வாழும் ஒரு நாட்டில் உறுதியான பலம்மிக்க, எதிர் கட்சியும் அதில் உறுதியான குரல்களும் இருப்பதே அங்கு வாழும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பானதாகும்.

ஆளும்  கட்சியில் முஸ்லிம் பிரதிநிதிகளை  அனுப்பும் அதேவேலை,  நாட்டில் ஒரு பலமான எதிர் கட்சியும்  அதில் பேசும் குரல்களும் இருக்க  வேண்டும்.

சிறு பான்மை மக்கள் வாழும் இந்த நாட்டில், எந்தளவு சிறந்த அரசாங்கமாக இருந்தாலும், மிகக்கூடுதலான அதிகாரத்தையும், ஆட்சியையும் எந்த ஒரு கட்சிக்கும் வழங்கக்கூடாது.

இவ்வாறு அமைவது  சிறுபான்மை மக்களுக்கு  இது பெரிய ஆபத்தாகும்.

1977 ஆம் ஆண்டு JR ஜயவர்தனாவுக்கு அன்று மக்கள் வழங்கிய தலை மீறிய  ஆதரவே,  இன்று இந்த நாட்டில்  முஸ்லிம்கள் உற்பட சிறுபானாமை  மக்கள் கொடுமைப்படுத்தப்படமைக்கும் ஒரு  காரணமாக அமைந்தது.

முக்கிய விடயமாக,  பாரளுமன்றத் தேர்தலில்  நமது பேசும் முஸ்லிம் குரல்களை பாதுகாத்துக் கொள்ள முஸ்லிம் சமூகம் தவரிவிடக் கூடாது.

தற்போதைய பாளுமன்றத்தில் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ள சில பேசும் குரல்கள் மிகப் பெரிய பொக்கிசங்கள்.

அந்த வகையில் கொழும்பில் முஜீபுர் ரஹ்மான் ,  மரிக்கார் பேன்றவர்கள் நமக்கு கிடைக்டப் பெற்ற பொக்கிசங்கள். கொழும்பு வாழ் மக்கள் இதைப் பற்றி பல முறை சிந்திக்க வேண்டும். 

தற்போது ஆளும்  NPP கட்சியில் கொழும்பு மாவட்டத்தில் முஸ்லிம் சார்பாக சிலர் போட்டியிட்ட போதிலும், நாட்டின் கடந்த கால நிகழ்வுகளை கருத்தில் கொண்டு நோக்கும்போது, அவர்களின் பேச்சாற்றலும், தைரியமும், துனிவும், போரடும் திறமையும், நாம் எதிர்நோக்கிய பிரச்சினைகளுடன் ஒப்பிடும் போது அற்பமானதே. 

அரசியல், கட்சிகள் , பிரிவுகள் என்று பல இருந்த போதிலும், சமூகம், சமூக  உரிமைகள், இஸ்லாமிய மார்க்க கடமைகள்
என்பது  முதலாவதானது என்பதை ஒரு போதும் நாம் மறந்து விடக்கூடாது.

மேலும் நாம் தெரிவு செய்து  பாரளுமன்றத்திற்கு அனுப்பியவர்களில் பலர் பல தசாப்தங்களாக சமூகத்திற்காக வாய்திறக்காத, பேசத் தெரியாத உறுப்பினர்களும் இருந்ததை நாம் மறந்து விடக்கூடாது. இதனால் கடந்த காலங்களில் பெரிய தவறுகள் விட்டதையும்  இம்முறை வாக்களிப்பின் போது நினைவில் கொள்ள வேண்டும். 

இந்த வகையில், கொழும்பு மாவட்டத்தில்,   சமூகத்திற்காக கோட்டாவிடம் உயிரை பணயமாக வைத்து முஸ்லிம் சமூகத்திற்காக போராடியவர்களில் முஜீப், மரிக்கார்  பேன்றவர்கள் முக்கியமானவர்கள்.

பேசும் குரல்களை ஒடுக்க ஜனாதிபதியாக இருந்த கோட்டாபே ராஜபக்ச அவர்கள் பல்வேறு விதங்களில் இவர்களைப் பின்தொடர்ந்த போதிலும் எந்த விதப் பயமும் இன்றி, சளைக்காமல், தைரியத்துடனும், துணிவுடனும் செயல்பட்டதை நாம் மறந்து விடக்கூடாது.
கடந்த ஜனாஸா எரிப்பின்போது பாகிஸ்தான் பிரதமரின் வருகையின் போது ஜனாதிபதியாக இருந்த கோட்டா,  அத்தினத்தில் எதிர்ப்பு ஊர்வலம் நடாத்தக் கூடாது என்று கடுமையான உத்தரவும் பாதுகாப்பும்  விதித்திருந்த போதிலும், அவை அத்தனையையும் மீறி பாகிஸ்தான் பிரதமர் தங்கி இருந்த ஹோட்டலின் முன்பாக ஜனாஸா எரிப்பு எதிர்ப்பு ஊர்வலம் நடாத்தியதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 

இதை செய்ய வேண்டாம் என,  முஸ்லிம்கள் தரப்பில் பலரும் ஆலோசனை கூறிய போதிலும்,  இவ்வாறான ஒரு துணிச்சலான தைரியமான ஒரு செயலை எந்த ஒரு அரசியல்வாதியும் செய்திருக்க மாட்டார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இன்று இலங்கை மக்கள் எந்த வகையிலும்,  எந்தப் பிரச்சினைகளிலும் கட்சி பேதமின்றி, கடந்த குண்டு வெடிப்பின் போது ஓடி ஒளியாமல், மக்களோடு மக்களாக நின்று,  சமூகத்திற்காக போராடி, கைதான அப்பாவிகளை விடுவிக்க  அர்பணிப்புடன் செயல்பட்டவர்களில் முஜீப் முக்கியமானவர்.

மேலும் குண்டு தாக்குதல் பழியில் இருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாக்க பாராளுமன்றத்திலும் வெளியிலும் குரல் கொடுத்ததில் இவர் முக்கியமானவர். 

கடந்த காலங்களில் இது போன்று  குரல் கொடுத்த வசந்த போன்றவர்கள் கொலை செய்யப்பட்ட போதிலும். தமது உயிரை துச்சமாக மதித்து செயல்பட்டார் .

முஸ்லிம் சமூகத்திற்கு பாராளுமன்றம் அனுப்ப ஆயிரம் பேர் இருந்த போதிலும், பேசும் குரல்களே எமக்கு முக்கியமானது.

எனவே  கொழும்பு வாழ் மக்கள் போசும் குரல்களை பாதுகாத்துக் கொள்ள சிந்திக்க வேண்டும். இது போன்றவர்களை தவர விடுவது முழு இலங்கை மக்களும் இழக்கும் ஒரு பேரிழப்பாகும் என் பதை  கவனத்தில் கொள்ள வேண்டும்.

கொழும்பு மாவட்டத்திலுள்ள முஸ்லிம் மக்கள், கடந்த கலங்களில் எமக்காக குரல் கொடுத்த இவர்களை  இழப்பார்களாயின் அது முழு இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கும் செய்யும் பெரிய தவறும்  இழப்புமாகும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

எனவே மாற்றத்தை விரும்பி,  ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க காத்திருக்கும் மக்கள்,  தவறுகள் ஏற்படும் போது அதை தைரியமாக சுட்டிக்காட்டும் உறுப்பினர்களையும் பாராளுமன்றம் அனுப்ப வேண்டும்.

ஆளும் கட்சியில் உள்ளவர்கள் ஒருபோதும் நடக்கும் தப்புகளையும் தவறுகளையும் துணிந்து  எதிர்த்து நிற்க முடியாது. இது இலங்கையின் அரசியல் சம்பிரதாயம்.

அவ்வாறு அவர்கள் எதிர்பார்களாயின் தூக்கி எறியப்படுவார்கள். இதற்கு கடந்த கால அரசாங்கத்தில் அலி சப்ரி அவர்கள் இருந்தமை ஒரு சிறந்த உதாரணமாகும்.
எனவே குறிப்பாக இலங்கை மக்களில் வாக்களிக்க காத்திருக்கும் கொழும்பு மாவட்ட மக்களின் பங்களிப்பே இம்முறை முக்கியமானதாகும்.

ஒரு வீட்டில் நான்கு வாக்குகள் இருக்குமாயின், மாற்றத்தை விரும்பி ஆளும் கட்சிக்கு வாக்களிக்க முடிவு செய்திருக்கும் மக்கள், சமூக நலன் கருதி இரண்டு வாக்குகளை நமக்காக,  பேசும் குரல்களுக்காக பயன்படுத்த முடிவு செய்வதே இம்முறை முஸ்லிம் சமூகத்திற்கு சகலச் சிறந்ததாகும்.


பேருவளைஹில்மி




 Ai SONGS

 



Post a Comment

0 Comments