Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஐஸ்லந்தில் 7-ஆவது முறையாக எரிமலை வெடிப்பு


ஐஸ்லந்தின் தலைநகரான ரெய்காவிக்கின் தென்மேற்கே இவ்வாண்டு 7-ஆவது முறையாக எரிமலை வெடித்துள்ளது.

அங்குள்ள மீன்பிடிக் கிராமத்தில் சுற்றுப்பயணிகளை வெகுவாகக் கவரும் Blue Lagoon வெப்ப ஆரோக்கிய நீரூற்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஷுட்னுக்ஸ்கிகா எரிமலை நேற்றிரவு வெடித்து நெருப்புக் குழம்பையும் சாம்பலையும் கக்கியது.

கிரின்டவிக் கிராமத்தைச் சுற்றித் தற்காப்புச் சுவர்கள் கட்டப்பட்டுள்ளன.

அந்தக் கிராமம் பொதுவாகவே எரிமலை வெடிப்பால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

அங்கு ஏறத்தாழ 4,000 பேர் வசிக்கின்றனர்.

சின்னச்சின்ன நிலநடுக்கங்கள் உணரப்பட்டதைத் தொடர்ந்து அந்நகரில் வசிக்கும் மக்கள் ஏற்கனவே வெளியேற்றப்பட்டனர்.

இதுவரை எரிமலை வெடிப்புகள் தலைநகர் ரெய்காவிக்கைப் பாதிக்கவில்லை என்று வானிலை ஆய்வகத்தார் கூறுகின்றனர்.

வடக்கு அட்லாண்டிக் அருகே அமைந்துள்ள ஐஸ்லந்தில் எரிமலை வெடிப்புகள் நிகழ்வது வழக்கம். 

nambikkai



 Ai SONGS

 



Post a Comment

0 Comments