Ticker

6/recent/ticker-posts

சைவ உணவு உண்பவர்கள் கவனத்திற்கு... வைட்டமின் பி9 குறைபாட்டை சரிசெய்வது எப்படி?


வைட்டமின் பி9 இன் குறைபாடு பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் மற்றும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். ஃபோலேட் அல்லது ஃபோலிக் என்றும் அழைக்கப்படும் இந்த வைட்டமின் டிஎன்ஏ தொகுப்பு, ஒருவரின் உயிரணு மற்றும் முழு நல்வாழ்விலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வைட்டமினுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தபோதிலும், இந்த வைட்டமின் குறைபாட்டால் சோர்வு, எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனைகள் போன்ற பல்வேறு அறிகுறிகளை இது ஏற்படுத்தும் என்பது பற்றி பலருக்கும் தெரியவில்லை.

கூடுதலாக, வைட்டமின் பி9 மனநிலை ஒழுங்குமுறை மற்றும் அறிவாற்றல் செயல்பாட்டிற்கும் உதவுகிறது.

“மறுபுறம், கடுமையான சந்தர்ப்பங்களில், வைட்டமின் பி9 இன் குறைபாடு இரத்த சோகைக்கு வழிவகுக்கும், இது இரத்த சிவப்பணுக்களின் குறைவு, மூச்சுத் திணறல் மற்றும் தலைச்சுற்றல் போன்ற அறிகுறிகளால் வகைப்படுத்தப்படும்” என்று பெங்களூரு ஆஸ்டர் சிஎம்ஐ மருத்துவமனையைச் சேர்ந்த மூத்த ஆலோசகரும், காஸ்மெடிக் டெர்மட்டாலஜி பிரிவின் தோல் மருத்துவருமான ஷிரீன் ஃபர்டாடோ கூறியுள்ளார்.

இரத்த சிவப்பணுக்களை உற்பத்தி செய்யும் உடலின் திறனுக்கும், நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கும் வைட்டமின் பி9 சமமான அளவில் அவசியமாகிறது. மேலும், மீரா ரோடு வோக்கார்ட் மருத்துவமனையின் உள் நோயாளிகள் பிரிவின் மருத்துவரான டாக்டர் அனிகேத் முலே, பி9 குறைபாடு இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றுடன் தொடர்புடையது, இது அதிக இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களை ஏற்படுத்துவதாக அறியப்படுகிறது என்றார்.

டாக்டர் முலேவின் கூற்றுப்படி, பெரும்பாலும் சைவ உணவு உண்பவர்கள் இந்தக் குறைபாட்டை எதிர்கொள்கின்றனர் என்றார்.

இந்த குறைபாட்டை தடுக்க, பச்சை இலை காய்கறிகள், சிட்ரஸ் பழங்கள், பருப்பு வகைகள் உள்ளிட்டவை அவசியம். அதாவது, கொண்டைக்கடலை, சோயா பீன்ஸ், வெண்டைக்காய், தக்காளி, பீன்ஸ், பருப்பு, கீரை, ஆரஞ்சு மற்றும் ஸ்வீட்கார்ன் போன்ற ஃபோலேட் நிறைந்த உணவுகளை உட்கொள்வது மிக முக்கியம் என்று மருத்துவர் மூலே கூறினார்.

சில சந்தர்ப்பங்களில், குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களுக்கு அல்லது ஊட்டச்சத்து உறிஞ்சுதலை பாதிக்கும் சில மருத்துவ நிலைமைகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்கு இந்த வைட்டமின் கூடுதலாக தேவைப்படலாம் என்று டாக்டர் ஃபர்டடோ கூறினார். வழக்கமான இரத்தப் பரிசோதனைகள் வைட்டமின் பி9 அளவைக் கண்காணிக்கவும், ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் உணவு மாற்றங்கள் அல்லது வைட்டமின் நிறைந்த சப்ளிமெண்ட்கள் மூலம் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுவதை உறுதிப்படுத்தவும் உதவும்.

போதிய ஃபோலேட் அளவுகள் நரம்புக் குழாய் குறைபாடுகள் மற்றும் குழந்தை பிறக்கும் நேரத்தில் ஏற்படும் முரண்பாடுகளுடன் தொடர்புடையவை என்று டாக்டர் மியூல் குறிப்பிட்டுள்ளார்.

“பி9 குறைபாடு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வதற்கும், உங்கள் பி9 அளவுகள் தேவையான வரம்பில் இருப்பதை உறுதிசெய்ய உணவுத் திட்டத்தைப் பரிந்துரைக்கவும் உதவும் ஒரு சுகாதார நிபுணரை நீங்கள் கலந்தாலோசிக்க வேண்டியது அவசியம்.

போதுமான பி9 அளவைப் பராமரிப்பது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானது, இது உங்கள் உடலை சீராக வைத்திருக்க உதவும்" என்று மருத்துவர் முலே கூறினார்.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments