Ticker

6/recent/ticker-posts

Ad Code



ஆசிரியையை உடல் முழுவதும் கடித்து வைத்த தலைமை ஆசிரியை - போதையில் வெறிச்செயல்


பெண் ஆசிரியைக்கு மயக்க மருந்து கொடுத்து தலைமை ஆசிரியை பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சங்கீதா(40) என்ற பெண்மணிக்கு திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளன. இவர் தனியார் பள்ளி தலைமை ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

அதே பள்ளியில் பணியாற்றும் 22 வயது ஆசிரியயை, 'அரையாண்டு தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும்' என தனது வீட்டுக்கு அழைத்துள்ளார் சங்கீதா. 

வீட்டுக்கு சென்ற இளம் ஆசிரியைக்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். குளிர்பானம் குடித்த பின் இளம் ஆசிரியை மயங்கி விழுந்துள்ளார். மயக்கம் தெளிந்து எழுந்து பார்த்த போது, அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளது. கடித்து வைத்ததற்கான தடயமும் உடல் முழுவதும் இருந்துள்ளது. 

இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் கொடூரமான காயங்களும் கடித்து வைத்த தடயங்களும் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த மருத்துவர்கள் இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில், தலைமை ஆசிரியை பள்ளியில் வைத்தே பலமுறை பாலியல் ரீதியாக பேசியுள்ளார். சம்பவ தினத்தன்று குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து பாலியல் தொந்தரவு அளித்துள்ளார் சங்கீதா. மயக்கம் தெளிந்த பின் தப்பியோட முயற்சித்த போது அடித்து உடைத்து வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

இதன் பின் வீட்டிலிருந்த செல்போன் மூலம் தனது தாயாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பின்னரே ,மீட்டு மருத்துவமனையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமை ஆசிரியை சங்கீதாவை கைது செய்தனர்.


ibctamilnadu



 Ai SONGS

 



Post a Comment

0 Comments