Ticker

6/recent/ticker-posts

பச்சை பால் அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி தெரியுமா..? விளக்கிய கேரள மருத்துவர்!

பால் மற்றும் பாலால் செய்யப்பட்ட பொருட்கள் அனைத்தும் பல ஊட்டச்சத்து நன்மைகளை அளிக்கும் என்பது நாம் அறிந்ததே. அதே வேளையில் பச்சையாக அல்லது பேஸ்டுரைஸ் செய்யப்படாத பாலை உட்கொள்வது உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?

சமீபத்தில், புகழ்பெற்ற சுகாதார நிபுணரான “தி லிவர் டாக்”, பச்சைப் பாலை உட்கொள்வதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து X சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் பச்சை பாலில் ஈ.கோலி, சால்மோனெல்லா மற்றும் லிஸ்டீரியா போன்ற தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வாழ்வதாக குறிப்பிட்டுள்ளார். பச்சை பால் குடிப்பதால் வயிற்றில் பலவித கோளாறுகள் ஏற்படலாம், எனவே தயவுசெய்து பச்சை பாலை குடிக்காதீர்கள், உங்கள் குழந்தைகளுக்கு பச்சைப் பால் கொடுக்காதீர்கள் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நம் முன்னோர்கள் செய்ததைப் போலவே நீங்களும் இயற்கையான முறையில் பாலை காய்ச்சி குடிப்பதே சிறந்தது , அதனால் தான் நம் முன்னோர்கள் 25-30 ஆண்டுகள் மிக நீண்ட ஆயுளை வாழ்ந்தார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பாலில் உள்ள மைக்கோபாக்டீரியம் காசநோய், கேம்பிலோபாக்டர், ஸ்டேஃபிளோகோகஸ் ஆரியஸ், யெர்சினியா, புருசெல்லா, காக்சியெல்லா போன்ற ஆபத்தான பாக்டீரியாக்களால் ஏற்படும் பாதிப்புகளை எளிதில் குணப்படுத்த முடியாது. அவற்றில் சில பாக்டீரியாக்கள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடியவை. உதாரணமாக லிஸ்டீரியா மூளையைத் தாக்கி வலிப்பு நோய்களை ஏற்படுத்தக்கூடும்.

பசும்பால் மட்டுமின்றி செம்மறி ஆடுகள் அல்லது பிற விலங்குகளின் பால் வகைகளையும் பச்சையாக அருந்துவது ஆபத்து ஆகும். இவற்றில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியா மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் கிருமிகளுக்கு இருக்கும் என்பது நியூயார்க் மாநில சுகாதார மற்றும் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையால் வெளியிடப்பட்ட ஆய்வு முடிவில் உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

குறிப்பாக நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்கள் பச்சை பால் அருந்தக்கூடாது என FDA பரிந்துரைத்துள்ளது. மேலும் நீரிழிவு நோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி/எய்ட்ஸ், புற்றுநோய் உள்ளவர்கள், குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு பச்சைப் பாலில் உள்ள கிருமிகள் ஆபத்தானவை, பச்சைப் பாலை உட்கொள்வது கீல்வாதப் பிரச்சனையை உண்டாக்கும் என்று விளக்கியுள்ளது.

தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் ஒட்டுண்ணிகளை அகற்ற, பச்சை பாலை சரியாக கொதிக்க வைத்து அருந்த வேண்டும் என பரிந்துரைத்துள்ளது. மேலும் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளைக் கொல்ல குறைந்தபட்சம் 30 வினாடிகளுக்கு பச்சை பாலை கொதிக்க வைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.

news18



 Ai SONGS

 



Post a Comment

0 Comments