
2024ம் ஆண்டில் உலக சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் விரும்பத்தக்க நாடாக இலங்கைக்கு தங்க விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் லண்டன் நகரில் நடைபெற்ற சுற்றுலா வாசகர் பயண விருதுகள் 2024 (Wanderlust Reader Travel Awards 2024) அமைப்பினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையை மிகவும் விரும்பத்தக்க தீவாகப் பெயரிடுவதற்கு இரண்டு லட்சத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் தங்கள் விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். அதனால் இந்தியப் பெருங்கடலின் 'முத்து' என்ற வகையில், சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமான தீவுகளில் ஒன்றாக இலங்கை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ரீதியாக 22 பிரிவுகளின் கீழ் நடைபெற்ற தரப்படுத்தலுக்கு மூன்று மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் வாக்களித்துள்ளதை அறிய முடிகின்றது.
பெருமளவு அண்ணியச் செலாவணியை ஈட்டித்தரும் இலங்கையின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கவிஞர் செம்மைத்துளியானின் கவிதை வரிகளுக்கு, நவீன ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் வேட்டை தயாரிப்பில் வழங்கியுள்ள பாடலை சமர்ப்பணம் செய்கின்றோம்!
வாழ்க ஸ்ரீலங்கா! வளர்க சுற்றுலாத்துறை!
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments