
இலங்கையின் பத்தாவது நாடாளுமன்றத்திற்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தலில், 14ம் திகதி முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா வாக்களித்தார்.
தேர்தல் காலங்களில் எவருக்கும் எந்தக் கட்சியை ஆதரிப்பதற்கும் முற்று முழுதாக உரிமை உண்டு; அதுதான் ஜனநாயகமும் கூட. அந்த உரிமையை எவ்வித அச்சமுமின்றி, ஜனாதிபதி மட்டுமன்றி, மக்களும் வாக்குச் சாவடிகளுக்குச் சென்று தமக்கு விருப்பமான கட்சிக்கும், வேட்பாளர்களுக்கும் அளித்துள்ளனர்.
வாக்குகள் எண்ணும் நடவடிக்கைகள் இரவு ஏழு மணிக்கு ஆரம்பமாகி, இரவு பத்துமணி முதல் பெறுபேறுகள் வெளியாகலாம் என்பதை அறிய முடிகின்றது.
சலுகைகளை நம்பி மக்கள் சோரம்போன காலம் இப்போது மலையேறிவிட்டது என்பதை ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் நிரூபித்துக் காட்டிவிட்ட நிலையில், இம்முறை பொதுத் தேர்தலிலும் அதுவே நிரூபணமாகியுள்ளது!
பொதுவாக யார் ஜனாதிபதியாக வந்தாலும், அடுத்த நாள் பொதுமக்களால் ஜீரணித்துக் கொள்ள முடியாத சம்பவங்கள் நாட்டினுள் அரங்கேறுவதுண்டு. காணுமிடமெல்லாம் பட்டாசு வெடிகளும், வெற்றிக் கேளிக்கைகளும் நிறைந்திருக்கும். பால்சோறு பகிர்ந்து மக்கள் வெற்றியைக் கொண்டாடுவர். கூடவே கைகலப்புகளும் இடம்பெறும்; அதனால் பாரிய விளைவுகள் ஏற்படுவதுமுண்டு. ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தல்களுக்குப்பின், அம்மாதிரியான எதுவும் நடந்ததாக இல்லை!
இலங்கையில் வரலாற்றில் தேர்தல் வன்முறை மற்றும் அரச சொத்துக்கள் வளங்களின் துஷ்பிரயோகம் முற்றிலும் இல்லாமல் நடக்கும் இரண்டாவது தேர்தல் இதுவாகும்.
பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டு ஒருவார காலத்திற்கு பேரணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது!
தேர்தலுக்கு பிறகு உண்டாகும் வெற்றியாளர்களின் நடவடிக்கைகளால் நாடு புரட்டி எடுக்கப்படுவது கடந்த காலத் தேர்தல்களில் ஒரு மரபாக இருந்து வந்தபோதிலும், நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் போலவே பெறுபேறுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலிலும் அது எதிர்மறையாகக் காணப்படுவதை ஊகிக்க முடிகின்றது!
சகல படாடோபங்களையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு, தான் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் ஈடுபாடு காட்டி வந்த புதிய ஜனாதிபதி, தனது சீர்திருத்தங்களை ஜனாதிபதி மாளிகையின் சமையல் அறையிலிருந்து ஆரம்பித்து, தேர்தலுக்கு முன் தம் மக்களுக்கு வாக்களித்தபடி, அவற்றை நிறைவேற்றிக் காட்ட வேண்டுமென்பதிலேயே கவனம் செலுத்தி வரலானார்.
தனது பதவியேற்பின்போது, ஜனாதிபதி அனுரகுமார பேசியதைக் கேட்ட மக்கள் ஊழல் ஒழிப்பு மற்றும் நல்லிணக்கத்திற்கான தெளிவான ஒளிக்கீற்று தம் முன் தெரிவதை உணரலாயினர்.
"நாம் எதிர்பார்க்கும் மாற்றத்திற்காக குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவை அனைத்தும் தற்போதைய பொருளாதாரத்தில் ஸ்தீர நிலையையும், நம்பிக்கையும் கட்டியெழுப்புவதில் மாத்திரமே தங்கியுள்ளது!" என்று தனது கன்னி உரையின்போது ஜனாதிபதி குறிப்பிட்டார்.
எதிர்கால அரசியல் பயணம் 'தேசிய மக்கள் சக்தி'க்கு சவால்மிக்க ஒன்றாகவே இருக்கப் போகின்றது.
இனவாதமற்ற, நாட்டை அபிவிருத்திப் பாதையில் கொண்டு செல்வதற்கு அது எடுக்கப்போகும் முயற்சிகள் கண்டிப்பாக போற்றப்பட வேண்டியவைகளாகத்தான் இருக்கப் போகின்றது!
ஜனாதிபதி தேர்தலில் அநுரவின் வெற்றிக்குப் பின்னர் இலங்கையில் பல அரசியல் நாடகங்கள் அரங்கேறிய போதிலும், மக்கள் தமது வாக்குப் பலத்தின்மீது மக்கள் அபார நம்பிக்கை கொண்டுள்ளனர்.
நாட்டை வங்குரோத்து செய்த அணிகள், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க நாடாளுமன்றத் தேர்தலை மையப்படுத்தி காய்ந்த நகர்த்தல்களை மேற்கொண்டபோதிலும், குறைந்த செலவினத்தோடு அணிகொண்ட ஜனாதிபதியின் பதவிப் பிரமாணத்தோடு புதிய அரசின் நகர்வுகள் ஆரம்பமாகின.
இலங்கையை மீளக் கட்டியெழுப்புவது என்பது ஒரு சவால் மிகுந்த போராட்டமாகும். இதனை சீர்படுத்தும் நோக்கில், தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தலில் தனது தலைவரைக் களமிறக்கி, வெற்றியையும் பெற்று நம்பிக்கையுடன் சீர்திருத்தம் செய்தபடி, மெல்ல நகர்ந்துவந்து நாட்கள் ஐம்பதையும் தாண்டிவிட்டது!
புதிய அரசு தனது ஆரம்ப நடவடிக்கையாக, ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு ஒதுக்கப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை விடுவிக்கப்பட்டன; பிரதமர் மற்றும் அவர்களது ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆம்புலன்ஸ்கள் திரும்பவும் பொதுச் சேவைக்குத் விடப்பட்டதோடு, VIP பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இரண்டாயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வழமையான பொலிஸ் சேவைக்கு மாற்றப்பட்டனர்.
வெளிநாட்டு தூதுவர் சேவைக்காக நியமிக்கப்பட்ட அரசியல்வாதிகளின் குடும்பங்களுடன் தொடர்புடையவர்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு, தகுதியான அதிகாரிகளின் நியமனங்கள் இடம்பெற்றன.
மூன்று தசாப்தங்களின் பின்னர் பலாலி - அச்சுவேலி வீதி பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டதோடு, பல வருட காலமாக மூடப்பட்டிருந்த காலிமுகச் சாலைகள் மீண்டும் திறந்து விடப்பட்டன.
அரச பாடசாலைகளின் பணிகளுக்காக பெற்றோரிடம் பணம் வசூலிப்பது தடைசெய்யப்பட்டதோடு, புதிய ஜனாதிபதியின் ஆலோசகர்கள் ஊதியம் இல்லாமல் தொண்டர் பணியில் சேர்ந்து கொண்டனர்.
கிராமிய மக்களின் வறுமை ஒழிப்பு:

தேசிய மக்கள் சக்தியை எதிர்த்து அரசியல் செய்வோரின் நிலைப்பாடு கிராமங்களைத் தொடர்ந்தும் வறுமையில் வைத்திருக்க வேண்டும் என்பதுதான்; அப்போதுதான் அவர்களால் அரசியல் செய்யலாம்.
கிராமிய மக்களது வறுமையை ஒழிப்பது பற்றியும்
விவசாயத்துறையைக் கட்டியெழுப்புவது பற்றியும் தேசிய மக்கள் சக்தி சிந்திக்கின்றது. அடுத்த போகத்தில், சிறந்த விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நெல் சந்தைப்படுத்தல் சபை மூலம் நல்ல விலைக்கு வாங்கி, அதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளை ஏற்படுத்திவரும் புதிய அரசு, கூட்டுறவுச் சங்கம், சதோச நிறுவனங்கள் மூலமாக நியாய விலையில் மக்களுக்கீ அரிசியை விற்கவும், இதற்காக சிறிய அரிசி ஆலை உரிமையாளர்களைப் பலப்படுத்தவும் நடவடிக்கைள் எடுக்கப்பட்டுள்ளது. பாலுற்பத்தியை அதிகரிப்பதோடு, பால் கொள்வனவு நிலையங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முதன்முறையாக மாற்றுத்திறனாளி சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்த பார்வையற்ற ஒருவர் தேசியப் பட்டியலில் பரிந்துரைக்கப்பட்டதோடு, தோட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக ஒருவரை தேசிய மக்கள் சக்தி தெரிவு செய்தது.
கடந்தகால நாடாளுமன்றத்தில் மக்களின் அதிருப்திக்குள்ளான அறுபதுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதை கைவிட்டனர்; மஹிந்த ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த எவரும் போட்டியிட முன்வரவில்லை.
சட்டம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளாக, அனைத்து அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அமைச்சர்கள் பயன்படுத்திய அரசாங்க வாகனங்களை திருப்பி அனுப்புமாறு ஜனாதிபதியின் உத்தரவையடுத்து. காலிமகத் திடல் முன்புறம் நூற்றுக்கணக்கான சொகுசு வாகனங்கள் நிறுத்தி விடப்பட்டன.
முன்னாள் அமைச்சர்கள் காலி செய்யாதிருந்த அரச குடியிருப்புகளை ஒப்படைக்க உத்தரவிடப்பட்டன. மின்சாரக் கட்டணம் மற்றும் தண்ணீர்க் கட்டணம் செலுத்தாத முன்னாள் அமைச்சர்களுக்கு அந்தக் கட்டணங்களைக் கட்டவும் உத்தரவிடப்பட்டது.
பதிவு செய்யப்படாத வாகனங்கள்:
இரண்டு முன்னாள் அமைச்சர்களான ஜோன்ஸ்டன், லொஹான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சட்டவிரோதமாக அசெம்பிள் செய்யப்பட்ட, பதிவு செய்யப்படாத வாகனங்களைப் பயன்படுத்தியதாக சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டதோடு, ஏனைய அமைச்சர்கள் தொடர்புடன் திருடப்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கண்டி பல்லேகல மற்றும் உடுதும்பர பொலிஸ் பிரிவுகளில் சந்தேகத்திற்கிடமான ஜீப், டிபென்டர் வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பள்ளே காட்டில் கண்டெடுக்கப்பட்ட டிபென்டர் வாகனம் ஜெயஸ்ரீ உயன பகுதியிலுள்ள வீடொன்றில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அசெம்பிள் செய்யப்பட்ட டிபென்டர் என அறிய முடிகின்றது. சந்தேகிக்கப்படும் ஜீப்பின் உரிமையாளர் எனக் கூறப்படும் 49 வயதுடைய மின் பொறியியலாளர் ஒருவரே பொலிஸில் சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மற்றைய ஜீப் உதானம்பர உயன்வல பகுதியிலுள்ள வீடொன்றின் கராஜில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது, ஆறு மாதங்களுக்கு முன்னர் சடங்கொன்றில் கலந்துகொள்வதற்காக வந்த நபரே ஜீப்பை நிறுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த ஜீப் இலக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், குருநாகல் ஆண்டகல பிரதேசத்தில் அதே இலக்கத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு ஜீப் இருப்பது தெரியவந்துள்ளது
மெண்டிஸ் டிஸ்டில்லர்ஸ் மதுபான நிறுவனத்தின் முதலாளி அர்ஜுன அலோசியஸுக்கு VAT வரி ஏய்ப்புக் குற்றச்சாட்டில் ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு கடந்த அரசாங்கத்தினால் விநியோகிக்கப்பட்ட 50 மதுக்கடை அனுமதிகள் இடைநிறுத்தப்பட்டமையும், மதுவரி செலுத்தாத பாரிய மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு 1.8 பில்லியன் ரூபா பாக்கியை உடனடியாக செலுத்த உத்தரவிடப்பட்டமையும் புதிய அரசின் அதிரடி நடவடிக்கைகளுள் முக்கியமானதாகும்!
அறுகம்பே தாக்குதல் விவகாரம்:

அறுகம்பேயில் தாக்குதல் நடத்தப்படலாம் என உளவுத்துறையின் மூலம் கிடைக்கப் பெற்ற செய்தியை அடிப்படையாகக் கொண்டு விரைந்து செயல்பட்டபோது, இச்சம்பவம் தொடர்பாக ஆறு பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.
அறுகம்பே தொடர்பில் அமெரிக்க தூதுவராலயம் விடுத்திருந்த பாதுகாப்பு ஆலோசனை நீக்கப்பட்டுள்ளதாக தூதரகமே இப்போது அறிக்கை விட்டுள்ளதோடு, வெளிநாட்டு அரசுகளின் பாராட்டுதல்களை புதிய அரசு பெற்றுள்ளது.
இலஞ்ச ஊழல்:
லஞ்சம் தொடர்பாக அரசு உயர் அதிகாரிகளுக்கு சட்ட அமுலாக்கத்தை செயல்படுத்த பூரண அதிகாரம் வழங்கியதன் காரணமாக இராஜதந்திரிகள், அதிபர்கள், சுங்க மற்றும் RMV அதிகாரிகள் உள்ளிட்ட உயர்மட்ட பலர் விசாரணைக்குட் பட்டனர்.
அத்துடன், சில காலமாக நிலுவையிலிருந்த பல பெரிய அளவிலான லஞ்ச ஊழல் வழக்குகளுக்குத் தீர்ப்புகள் வழங்கப்பட்டன.
அவர்களுள் நான்கு சுங்க அதிகாரிகளுக்கு முப்பத்தைந்து வருட சிறைத்தண்டனையும், முன்னாள் அமைச்சரான சாந்த பிரேமரத்னவுக்கு நான்கு வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டிற்கு இடையூறு விளைவிக்கும் ஏழு பெரிய அளவிலான குற்றங்களைக் கண்டுபிடித்து நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்த அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது. அவற்றில் லசந்த விக்கிரமதுங்க, தாஜுதீன், ஈஸ்டர் தாக்குதல் என்பனவும் அடங்கும்.
MV -X Press Pearl கப்பலில் ஏற்பட்ட தீயினால் இந் நாட்டுக்கு நேர்ந்த பாதிப்புகளும் சேதங்களும் குறித்து சகல துறைகளும் உள்ளடக்கியவாறு இழப்பீட்டைப் பெற்றுக் கொள்ளுதலில் ஏற்பட்ட குறைபாடுகள் குறித்து விசாரிக்க புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
பெரிய அளவிலான போதைப்பொருள் சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், செவனகல பிரதேசத்தில் 40 கிலோகிராம் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள், 280 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள் வியாபாரம் செய்த சந்தேகநபர்கள் 250 மில்லியன் பெறுமதியான மற்றும் பல்வேறு போதைப்பொருள்கள் உட்பட பல்வேறு வகையான போதைப்பொருட்களை பிலியந்தலில் இருந்து விமான நிலைய சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜகிரியவில் கட்டிடமொன்றை குத்தகைக்கு வழங்கியமை தொடர்பில் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட 660 மில்லியன் ரூபா வைப்புத் தொகையை மீளப்பெறுமாறு அரசாங்கத்திற்கு சட்டமா அதிபர் ஆலோசனை.
தாய்லாந்து அரசாங்கத்தின் தலையீட்டுடன், சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் மியான்மாரில் முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள நாற்பது இலங்கையர்களை விடுவிக்கும் பணியை பிரதமர் ஹரிணி தொடங்கியுள்ளார்.
வெளிநாட்டு உறவுகள், உதவி மற்றும் கடன்:
ஜப்பானிய உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படவிருந்த கட்டுநாயக்க விமான நிலையத்தின் இரண்டாவது கண்காணிப்பு பணி ஜப்பானிய அரசாங்கத்தின் உடன்பாட்டுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படும்.
சுற்றுலா சீசன் காரணமாக போலந்து மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகள் மீண்டும் இலங்கைக்கு விமானங்களை விடுவித்துள்ளன.
கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு சீனா 400 மில்லியன் உலர் பொருட்களையும் முப்பது மில்லியன் டாலர்களையும் உதவியாக வழங்கியது.
பிரதமர் ஹரிணி ஐக்கிய நாடுகள் சபைப் பிரதிநிதிகள் சந்தித்தபோது, இலங்கையில் வறுமையை ஒழிக்கவும், டிஜிட்டல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களுக்காக ஆசிய வளர்ச்சி வங்கியிடமிருந்து முப்பது மில்லியன் டொலர் கடன் பெறப்பட்டது.
இந்தியாவின் தலையீட்டில் 5000 மத வழிபாட்டுத் தலங்களுக்கு சோலார் பவர் பேனல்களை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்தியா இலங்கைக்கு 22 டீசல் இன்ஜின்களை நன்கொடையாக வழங்கியது.
பொருளாதாரம் தொடர்பான நடவடிக்கைகள்:

வாஷிங்டனில் IMF பிரதிநிதிகளுக்கும் இலங்கைப் பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பு நடந்தது. உடன்படிக்கையை தொடர்ந்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் வலுவடைந்துள்ளது. ஒரு டொலரின் கொள்வனவு விலை 290 ரூபா வரை குறைந்துள்ளது.
2024ம் ஆண்டு இறுதிக்குள் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 4.4% ஆக அதிகரிக்கும் என உலக வங்கி தெரிவித்துள்ளது. இது எதிர்பார்த்த எண்ணிக்கையான 3.5% ஐ விட அதிகமாகும்.
செயலில் உள்ள வெளிநாட்டு முதலீட்டுடன் கடந்த மாதத்தில் பங்குச் சந்தை விலைக் குறியீடுகளில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் செவனகல சீனி தொழிற்சாலைக்கு சொந்தமான 11000 ஏக்கர் காணி தற்காலிக பயிர்ச்செய்கைக்காக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 2024 வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக இரண்டு கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதாக மில்கோ தெரிவித்துள்ளது.
பொதுப்போக்குவரத்து சேவைகளுக்காக வாகனங்களை இறக்குமதி செய்யத் தொடங்குகிறது.
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மற்றும் மின்சார வாரியத்தை தனியார்மயமாக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
அக்டோபர் 2023 உடன் ஒப்பிடும்போது 2024 அக்டோபரில் சுற்றுலாப் பயணிகளின் வருகை 25% அதிகரித்துள்ளது.
செப்டம்பர் 2023 உடன் ஒப்பிடும்போது செப்டம்பர் 2024 இல் வெளிநாட்டு ஊழியர்களிடமிருந்து அனுப்பப்பட்ட பணத்தில் $63 மில்லியன் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது அக்டோபர் 2024ல் பணவீக்கத்தில் குறைவு நிலை ஏற்பட்டுள்ளது.
ஆடை ஏற்றுமதி வருவாய் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐநூறு மில்லியன் டாலர்களுக்கு மேல் பதிவாகியுள்ளது.
துறைமுகம் கொள்கலன் சரக்கு கட்டணத்தை குறைக்கிறது.
ஷீல்ட் என்ற அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமானது 8.5 மில்லியன் டொலர் முதலீட்டில் இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிக்கிறது.
புதிய அரசின் புதிய நியமனங்கள்:
டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் இலங்கை அரச நிறுவனங்களை டிஜிட்டல் மாற்றத்தை நோக்கி வழிநடத்தும் பொறுப்பை ஆச்சார்யா ஹான்ஸ் விஜேசூரிய ஏற்றுக் கொண்டுள்ளார். (Electrical and Electronic Engineering from the University of Cambridge, UK, an MBA from the University of Warwick UK and a PhD in Digital Mobile Communications from the University of Bristol, UK.)
இலங்கை வங்கியின் தலைவராக முப்பது வருட நிர்வாக அனுபவம் கொண்ட திரு.கவிங்க டி சொய்சா நியமிக்கப் படுகிறார். (MBA from the University of Colombo (Merit Pass), and a Gold Medalist, Fellow of the Chartered Institute of Management Accountants (CIMA)U.K., Fellow of the Chartered Institute of Marketing (CIM) U.K.Chartered Global Management Accountant (CGMA) - AICPA & CIMA)
ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் தலைவராக பேராசிரியர் மோதிலால் டி சில்வா பதவியேற்றார். (Doctor of Business Administration from PPA Business School, Paris, MSc in IT from Keele University UK, MBA from PIM, SL, BSc (Engineering) SL, Post Graduate Diploma in Strategic Management from Maastricht School of Management, Netherland and a Post Graduate Diploma in Marketing Management from PIM SL)
சிவில் விமான போக்குவரத்து அதிகார சபையின் தலைவராக திரு. சுனில் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். (Postgraduate qualification in Customs Law and Management from the University of Sri Jayewardenepura and the University of Canberra, Australia.)
ஸ்ரீ லங்கா முதலீட்டு சபையின் தலைவராக திரு. அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். (fellow member of the Institute of Chartered Accountants of Sri Lanka and is a Chartered Global Management Accountant with a Bachelor of Science degree from the University of Colombo, MBA from the University of Strathclyde in the United Kingdom and a Master of Arts in Financial Economics from the University.)
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு சிரேஷ்ட பேராசிரியர் கபில செனவிரத்ன. (BSc in Chemistry from the University of Kelaniya and a Ph.D. from Wayne State University, USA, with postdoctoral studies at the University of British Columbia, Canada)
ஹெய்லீஸ் குழுமத்தின் முன்னாள் தலைவர் சரத் கனேகொட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தை பொறுப் பேற்றுள்ளார். (Fellow Member of CA Sri Lanka and a Member of the Institute of Certified Management Accountants of Australia. MBA from the Postgraduate Institute of Management, University of Sri Jayewardenepura)
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments