Ticker

6/recent/ticker-posts

சிறைக் கைதிகள் நடத்தும் நாடகம்


பெருவிலிருக்கிறது லுரிகான்சோ (Lurigancho) சிறைச்சாலை....

அங்குள்ள கைதிகள் சற்று வித்தியாசமாக மேடை நாடகத்தை அரங்கேற்றிவருகின்றனர். 

கொள்ளை, கொலை ஆகிய குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்ட கைதி ஒருவரின் வாழ்க்கைக் கதையை அவர்கள் நடித்துக் காட்டுகின்றனர்.

அந்த மேடைப் படைப்பின் பெயர் 
‘Lurigancho, the musical’. 

"Gran Teatro Nacional" என்ற அரங்கத்தில் அது படைக்கப்படுகிறது.

நாடகத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் கைதிகள் கொள்ளை, போதைப் பொருள் ஆகிய குற்றச்செயல்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்.

ஆனால் சிறையில் நல்ல நடத்தையை வெளிப்படுத்தியதால் அவர்களுக்கு நடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதன்வழி சுமார் 30 சிறைக் கைதிகள் மேடைக் கலைஞர்களாக மாறியுள்ளனர்.

2023ஆம் ஆண்டிலிருந்து இதுவரை அவர்கள் 3 மேடை நாடகங்களைப் படைத்துள்ளனர்.

நாடகத்தின் போது அவர்கள் தப்பிவிடாமல் இருக்க சுமார் 100 அதிகாரிகள் அரங்கத்தைச் சுற்றிப் பாதுகாக்கின்றனர்.

நாடகத்தைக் காண கட்டணம் இல்லை.

சிறையின் உயர் அதிகாரிகள், கைதிகளின் குடும்பத்தார் எனப் பலரும் அதனைக் கண்டு ரசிக்கின்றனர்.

நாடகத்தின் வழி மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க முடிவதாக 54 வயதுக் கைதி ஒருவர் தெரிவித்தார். 

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments