
மூத்த அரசியல்வாதியும், முன்னாள் அமைச்சரும், பிரதமர் கலாநிதி ஹரிணியின் விஷேட செயலாளரும் சிரேஷ்ட சட்ட ஆலோசகுமான ஹஸானா அவர்களின் தந்தையுமான, 'வேதாந்தி' முஹம்மத் ஹஸன் சேகு இஸ்ஸதீன் அவர்கள் காலமானார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்!
செய்கு இஸ்ஸதீன் அவர்கள் ஆசிரியராக, சட்டத் தரணியாக, அரசியல்வாதியாக, அமைச்சராகவும் மட்டுமன்றி, எழுத்தாளராகவும் பரிணமித்த முழுமையான ஆளுமையாவார்.
1944ம் ஆண்டு மே மாதம் 12ம் திகதி பிறந்துள்ள இவர், இலங்கை பாராளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் பணியாற்றியவராவார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர்களுள் ஒருவராக இருந்துள்ள இவர், ஆரம்ப காலத்தில் கட்சியின் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்களிப்பைச் செய்தவர்; மேலும் கட்சியின் அரசியலமைப்பை எழுதிய நபராகவும் கருதப்படுகின்றார்.
2001ம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் நுழைந்துள்ள இவர், 2004ம் ஆண்டு முதல் 2007ம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஊடகத்துறை துணை அமைச்சராகப் பணியாற்றினார்.
இணைக்கப்பட்ட வடக்கு-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியுள்ள இவர், ஏற்றுமதி அபிவிருத்தி, வெகுஜன ஊடகத் தகவல்துறை, கிராமியப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் நெடுஞ்சாலைகள் போன்ற பல அமைச்சு மற்றும் பிரதி அமைச்சுப் பதவிகளை 2010ம் ஆண்டு வரை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
வல்ல அல்லாஹ் அன்னாரின் இம்மை வாழ்வை அங்கீகரித்து, மறுமை வாழ்வில் ஈடேற்றத்தைக் கொடுத்தருள்வானாக!
செம்மைத்துளியான்
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments