
"லெபனானில் போர் நிறுத்தம் செய்ய முடியுமென்றால் ,காசாவிலும் போர் நிறுத்தம் செய்து பணயக் கைதிகளை மீட்டெடுக்கலாமே?" என்று இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
இஸ்ரேலின் 103FM வானொலியில் பேசிய Yair Golan, காசாவில் சண்டையை நிறுத்த அரசாங்கம் ஏன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பினார்.
"தெற்கில் [காசா] போரை முடிவுக்குக் கொண்டுவருவது மிக முக்கியமான ஒரு விடயம் " என்று ஜனநாயகக் கட்சியின் எதிர்க்கட்சி கூட்டணிக்கு தலைமை தாங்கும் கோலன் கூறினார்.
"ஹிஸ்புல்லாவுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடிந்தால், ஏன் ஹமாஸுடன் உடன்பாடு செய்து பணயக்கைதிகளை விடுவிக்க முடியாது?"
"நெதன்யாகு போரை வெற்றி கொண்டு பணயக்கைதிகளை மீட்டு தன்னை இஸ்ரேலின் ஒரு ஹீரோவாக காட்ட விரும்புகிறார். பணயக்கைதிகளை மீட்க அவர் போரிடவில்லை.அதனால்தான் சண்டை தொடர்கிறது," என்று இஸ்ரேலிய மக்கள் நெதன்யாஹுவுக்கு எதிராக குரல் எழுப்புகின்றனர்" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)





0 Comments