Ticker

6/recent/ticker-posts

இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!

இந்தியா டுடே நாளிதழ் நவம்பர் மாத இதழில் "இந்தியாவின் அதிகார சபை" என்ற தலைப்பில் சக்திவாய்ந்த மனிதர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.டாப் 10 பட்டியலில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு 8வது இடம் வழங்கப்பட்டுள்ளது.

பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் என நீளும் இந்த பட்டியலில் 5 மாநில முதலமைச்சர்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். அதில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலிடம் பிடித்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றதற்கான காரணத்தையும் அந்த இதழ் பட்டியலிட்டுள்ளது. அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அடக்கமான போர்வீரன் என்ற புகழாரம் சூட்டியுள்ள நாளிதழ் இந்தியாவின் தென் கோட்டையைப் பிடித்து வைத்திருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்றும் கூறியுள்ளது. மேலும் தமிழ்நாட்டில் அவருக்குள்ள செல்வாக்கு காரணமாக அவரின் குரல் டெல்லி அதிகாரத்தின் செவியை எட்டுகிறது என்றும் கூறியுள்ளது.

லோக்சபாவில் திமுகவுக்கு 22 எம்பிக்கள், ராஜ்யசபையில் 10 எம்பிக்கள் மட்டுமின்றி தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 70% வாக்குகளுடன் வெற்றி வகை சூடியது. எல்லா மாநிலங்களிலும் பாஜகவுக்கு சில தொகுதிகள் கிடைத்த சூழலிலும் தமிழ்நாட்டில் ஒரு இடம்கூட கிடைக்காமல் செய்ததில் முக்கிய பங்கு வகித்தவர் என்றும் கூறியுள்ளது.

தென்னிந்தியாவில் இந்தியா கூட்டணிக்கு ஒரு முக்கிய அம்சமாக எஃகு போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என்றும் பாராட்டு தெரிவித்துள்ளது. 2021ஆம் ஆண்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆனதில் இருந்து, அவரது திமுக அரசு 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை நோக்கி செயல்பட்டு வருகிறது என்றும்,500 நிறுவனங்கள் உட்பட 130 நிறுவனங்களிடம் இருந்து ரூ.9.74 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளார் என்றும் கூறியுள்ளது.

kalaignarseithigal



 Ai SONGS

 



Post a Comment

0 Comments