மரண தண்டனைக்கு எதிரான குழு பதிவு செய்த பொய்யான தகவல்களைப் பயனீட்டாளர்கள் சிலர் பகிர்ந்தனர்.
அவர்களுக்கு எதிராக அந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.
கடந்த மாதம் (அக்டோபர்) 23, 24 ஆகிய தேதிகளில் 10 Facebook பதிவுகளும் 30 Instagram பதிவுகளும் செய்யப்பட்டது தனக்குத் தெரியும் என்று உள்துறை அமைச்சு கூறியது.
Transformative Justice Collective எனப்படும் மரண தண்டனைக்கு எதிரான குழு அக்டோபர் 2ஆம் தேதி அந்தப் பதிவைச் செய்தது.
பொய்யான தகவல்கள் குழுவின் இணையப்பக்கத்திலும் Facebook, Instagram, TikTok, X போன்ற சமூக ஊடகங்களில் இடம்பெற்றன.
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளைக் கையாளும் விதம், சிங்கப்பூரில் மரண தண்டனை ஆகியவை பற்றிய பொய்யான தகவல்கள் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 5ஆம் தேதி அந்தக் குழுவுக்குத் திருத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அடுத்த நாள் அந்தக் குழு உத்தரவிற்குக் கட்டுப்பட்டு தன்னுடைய பதிவுகளில் திருத்த அறிக்கைகளை சேர்த்தது.
பதிவில் பொய்யான தகவல்கள் இருப்பதாகக் குழு அதில் கூறியது.
அந்தப் பதிவுகளைப் பகிர்ந்துகொண்ட தனிநபர்கள் பொய்யான தகவல்களைப் பகிரத் தெரிவுசெய்ததாக உள்துறை அமைச்சு சொன்னது.
எனவே Facebook, Instagram தளங்களை நிர்வகிக்கும் Meta நிறுவனத்திற்கு POFMA உத்தரவு பிறப்பிக்கும்படி அமைச்சு POFMA அலுவலகத்திடம் கூறியது.
nambikkai
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments