
காலை வேளையில் சூடான தேநீருடன், ஒரு புத்தகமோ அல்லது செய்தித்தாளோ படித்தபடிதான் நம்மில் பலரும் அன்றைய நாளை தொடங்குவோம். அதுவும் டீ நமது கலாச்சாரத்தில் முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் இந்த டீ குடிக்க மிஞ்சிப்போனால் நீங்கள் எவ்வளவு பணம் செலுத்துவீர்கள்? இந்தியாவில் சாதாரணமாக ஒரு டீ-யின் விலை ரூ.10, ரூ.20 முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் ரூ.500-700 வரை கூட இருக்கலாம். ஆனால் சமீபத்தில் துபாயில் உள்ள இந்திய வம்சாவளி ஒருவர் நடத்திவரும் கஃபேயில் ரூ.1 லட்சத்திற்கு தேநீர் வழங்கியுள்ளது நெட்டிசன்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
துபாயில் உள்ள டிஐஎஃப்சியின் எமிரேட்ஸ் பைனான்சியல் டவர்ஸில், போஹோ கஃபே வழங்கும் இந்த ‘தங்க கரக்’ டீயின் மேல் 24 காரட் தங்க இலைகளுடன் தூய வெள்ளி கோப்பைகளில் பரிமாறப்படுகிறது. இந்த ஒரு டீ-யின் விலை இந்திய மதிப்பில் ரூ.1.14 லட்சம் ஆகும்.
இந்த கஃபே இரண்டு மெனுக்களை வழங்குகிறது. இங்கு வருகை தருபவர்கள் தங்கள் விருப்பப்படி, விலை குறைவான இந்திய தெருவோர உணவுகளையும் அதிக உயர்தர உணவு வகைகளையும் தேர்ந்தெடுக்கலாம். ஓட்டலின் உரிமையாளரான சுசேதா ஷர்மா கூறுகையில், “நிறைய மக்களுக்கு உணவளிக்கும் அதே வேளையில், தேர்ந்து ரசித்து உண்ண விரும்பும் மக்களுக்கு விதிவிலக்கான ஒன்றை உருவாக்க விரும்பினோம்” என்கிறார்.
இது தவிர, இந்திய மதிப்பில் ரூ.1.09 லட்சம் விலையுள்ள தங்க காபி வெள்ளிப் பாத்திரத்தில் தரப்படுகிறது. இதை வாடிக்கையாளர்கள் விரும்பினால் தங்கள் வீட்டிற்கு எடுத்துச் செல்லலாம். மேலும் இந்த கஃபேயின் மெனுவில் தங்கம் தூவப்பட்ட குரோசண்ட்ஸ், தங்க தண்ணீர், தங்க பர்கர் மற்றும் தங்க ஐஸ்கிரீம் ஆகியவையும் உள்ளன.
சமீபத்தில், உணவு குறித்து எழுதிவரும் வலைப்பதிவர் ஒருவர், இந்த கஃபேயில் வழங்கப்படும் தங்க டீ மற்றும் காபியை வீடியோவாகப் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த பல நெட்டிசன்கள் தங்கள் எதிர்வினைகளைப் பகிர்ந்து கொண்டனர். “இந்த டீயை இஎம்ஐ செலுத்தி தான் குடிக்க வேண்டும் போல” என ஒருவர் இன்ஸ்டாகிராமில் தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
“அது தங்கமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், எப்படியும் கடைசியில் கழிப்பறைக்கு தான் செல்லப் போகிறது” என்றும், “இது பணத்தை வீணடிக்கும் செயல்” என்றும், “சுத்த அபத்தம்; இதற்கு செலவு செய்தவருக்கு பணத்தின் மதிப்பு தெரியவில்லை” என்பது போன்றும் பலர் விமர்சித்து வருகின்றனர்.
“நாசூக்காக கொள்ளையடித்தல் என்பது இதுதான். வெள்ளிப் பாத்திரம் மற்றும் தங்கத் தாள்களையும் சேர்த்தால் கூட 700 கிராமுக்கு மேல் வராது. ஆனால் அதற்கு இவர்கள் 5,000 கிராம் வசூலிப்பது மிகவும் அபத்தமானது!” என ஒருவர் பதிவிட்டுள்ளார்.
ஒரு கப் டீ அல்லது காபிக்கு நீங்களாக இருந்தால் எவ்வளவு கொடுப்பீர்கள்?
news18
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
.gif)




0 Comments