Ticker

6/recent/ticker-posts

$100 பில்லியன் நன்கொடை - உத்தரவாதம் பெற்ற உலக வங்கி


உலக வங்கி 100 பில்லியன் டாலர் நன்கொடைக்கான உத்தரவாதத்தைப் பெற்றுள்ளது.

மூவாண்டில் அந்த நன்கொடையை வழங்க நாடுகள் உறுதி தெரிவித்தன.

வறுமையில் வாடும் நாடுகளுக்கு உதவப் பணம் கைகொடுக்கும்.

தென் கொரிய தலைநகர் சோலில் நடைபெறும் இரண்டு நாள் மாநாட்டில் உலக வங்கி புதிய நன்கொடை பற்றி அறிவித்தது.

வருமானம் குறைவாயுள்ள 78 நாடுகள் உயிர்ப்போராட்டம் நடத்துவதாக உலக வங்கி சொல்கிறது.

கடன்சுமை, வானிலைப் பேரிடர், விலைவாசி உயர்வு, போர் ஆகியவற்றில் அந்த நாடுகள் சிக்கித் தவிக்கின்றன.

உலக வங்கி அவற்றுக்கு மானியமும், குறைந்த வட்டியில் கடனும் கொடுத்து உதவும்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments