Ticker

6/recent/ticker-posts

சிறைவாசத்தை வீட்டில் செலவிட விரும்பும் நஜிப் வழக்கில் புதிய திருப்பம்


மலேசியாவின் முன்னைய பிரதமர் நஜிப் ரசாக், எஞ்சியிருக்கும் சிறைவாசத்தை வீட்டில் செலவிடும் பொருட்டு நீதிமன்றத்தில் புதிய ஆதாரங்களைச் சமர்ப்பிக்க விண்ணப்பித்திருக்கிறார்.

வழக்கு நேற்று (5 டிசம்பர்) தொடங்கியிருக்க வேண்டும்.

நஜிப் தரப்பு கொடுத்த உறுதி மொழிப் பத்திரத்தைப் பார்க்க அரசாங்கத் தரப்பு வழக்கறிஞர்கள் அவகாசம் கேட்டதால், வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

ஆறு ஆண்டு சிறைத் தண்டனையை அனுபவிக்கும் நஜிப், எஞ்சியிருக்கும் நாலாண்டுக் காலம் வீட்டுக் காவலில் இருக்க விரும்புகிறார்.

முன்னைய மாமன்னர் அதற்கு இணங்கியதாக நஜிப் மகன் நிஸார் நஜிப் (Nizar Najib) கொடுத்த உறுதிமொழிப் பத்திரம் சொல்கிறது.

முன்னைய மாமன்னர் நஜிப்பின் 12 ஆண்டு சிறைத் தண்டனையை ஆறாண்டாகக் குறைத்தார். 210 மில்லியன் ரிங்கிட் அபராதத்தை 50 மில்லியனாகக் குறைத்தார்.

ஜனவரி 30ஆம் தேதி மாமன்னர் பொறுப்பில் இருந்து ஓய்வுபெறும்முன் கடைசியாக அவர் அந்த முடிவுகளை எடுத்தார்.

seithi



 Ai SONGS

 



Post a Comment

0 Comments