Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரும் வாழும் குறளும் (பன்முக ஆய்வு)-16


"உற்றுழி யுதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றை நிலை முனியாது கற்றல் நன்றே பிறப்போ ரன்ன வுடன்வயிற் நுள்ளுஞ் சிறப்பின் பாலாற்றா மனந் திரியும் ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும் மூத்தோன் வருக வென்னா தவருள் அறிவுடை யோனா றரசுஞ் செல்லும் வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளுங் கீழ்ப்பா லொருவன் சுற்பின் மேற்பா லொருவனு மவன்கட் படுமே
எனும் பாடலில் பாண்டியன் கல்வியின் அவசியத்தையும், சிறப்பையும் எடுத்தியம்பியதால், இவன் காலத்தில் கல்வி வளம் குன்றி இருந்தது என நாம் கொள்ளலாம். இவனது காலத்தில் சங்கத்தமிழ் வளத்தோடு இருந்திருந்தால், பாண்டியவேந்தனான இவன் இவ்வாறு பாடியிருக்க மாட்டான்!

இவ்வாறு தமிழ் வளம் பெருக்க எண்ணிய இம்மன்னன், விதி சூழ, மதி கெட்டு, நாவிலே சொல் தவறிய உரையால் கோவலன் கொலை பட்டான். இதுவே, கோவலனின் மனைவி கண்ணகியால், பாண்டிய வேந்தனுக்கு இறுதிக் காலமும் ஆனது பரிதாபத்திற்கு உரியது.
பாண்டிய வேந்தன், சாபத்தால் திடீரென மாண்டதால் பாண்டிய நாட்டில் பெரும் குழப்பம் நிகழ்ந்தது. சுண்ணகியின் வெஞ்சினத்தால் கூடல் மா நகரான மதுரை மா நகர் தீயினால் பட்டுப் பொலிவிழந்தது.

பன்னீராண்டு நாடெங்கும் பஞ்சம் உண்டாயிற்று.

மதுரை கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும் மதுரையை விட்டு நீங்கிச் சென்று, சேர மன்னன் செங்குட்டுவனிடம் வந்து சேர்ந்தார். இதனைச் சாத்தனார்.

"பன்னீரியாண்டு பாண்டி நன்னாடு மன்னுயிர் மடிய மழைவளமிழந்தது"எனும் தாமே நேரில் கண்டு கூறுதலால் நாம் கண்டு கொள்ளலாம்.

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments