Ticker

6/recent/ticker-posts

Ad Code



வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-70


355. வினா : அமைச்சன் அறிந்திருக்க வேண்டியது எவை?
விடை: கருவியும், காலமும், செய்கையும், செயல் திறமும்
கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு.(631)

356. வினா : ஒரு அமைச்சர் பெற்றிருக்க வேண்டியவை எவை?
விடை: மன உறுதி, குடிப்பிறப்பு, காக்கும் திறன், கல்வி, முயற்சி
வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு ஐந்துடன் மாண்டது அமைச்சு.(632)

357. வினா : தீராத சிக்கல் யாருக்கு இல்லை?
விடை: அறிவுக்கூர்மையும், படிப்பறிவும் உடையோர்க்கு 
மதிநுட்பம் நூலோடு உடையார்க்கு அதிநுட்பம் யாஉள முன்னிற் பவை.(636)

358. வினா : பழுது என்னும் மந்திரி - எத்தகையவன்?
விடை: பகைவரைவிட கேடு செய்பவன்
பழுதெண்ணும் மந்திரியின் பக்கத்துள் தெவ்வோர் எழுபது கோடி உறும்.
(639)

359. வினா : எதையும் அரைகுறையாகவே செய்பவர் யார்?
விடை: செயல்திறன் இல்லாதவர் 
முறைப்படச் சூழ்ந்தும் முடிவிலவே செய்வர் திறப்பாடு இலாஅ தவர்.(640)

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments