Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் விளக்கம்- திருநெவேலி குரலில்-169


குறள் 533
பொச்சாப்பார்க் கில்லை புகழ்மை அதுஉலகத்து
எப்பால்நூ லோர்க்கும் துணிவு.

மறதி கொணம் உடைய ஆளுங்களுக்கு பேரும் புகழும் கெடைய்க்காது. இது படிச்ச ஆளுங்க சொல்லக்கூடிய கருத்து. 

குறள் 535
முன்னுறக் காவாது இழுக்கியான் தன்பிழை
பின்னூறு இரங்கி விடும்.

என்ன நடக்கும்னு முன்னக்கூட்டியே நல்ல யோசிக்காம ஒருத்தன் ஒரு வேலையில இறங்கின பொறவு அதுனால எதாவது துன்பம் வந்துட்டுன்னா, தான் செஞ்ச தப்பை நெனச்சு கவலைப் படுவான். 

குறள் 537
அரியஎன்று ஆகாத இல்லைபொச் சாவாக்
கருவியால் போற்றிச் செயின்.

மறதில்லாம் இல்லைங்கிற கொணம் மட்டும் ஒருத்தங்கிட்ட  இல்லாம இருந்துட்டா போதும், அவனுக்கு செய்ய முடியாத வேலைன்னு எதுவுமே கெடையாது. 

குறள் 538
புகழ்ந்தவை போற்றிச் செயல்வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்.

பெரியவங்க சொல்லியிருக்க நல்லவைகளை நாம விரும்பிச் செய்யணும். அதை விட்டுட்டு அதையெல்லாம் செய்ய மறந்தா ஏழு பிறப்பிலும் நன்மை இல்லை. 

குறள் 540
உள்ளியது எய்தல் எளிதுமன் மற்றுந்தான்
உள்ளியது உள்ளப் பெறின்.

ஒண்ணை அடையணும்னு நெனைச்சுட்டா, அதைப்பத்திய நெனைப்பு எப்பமும் மனசுல இருக்கணும். இது மட்டும் இருந்திட்டுன்னா, நெனச்சதை சுளுவா அடைஞ்சிறலாம். 

(தொடரும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments