Ticker

6/recent/ticker-posts

Ad Code



புரோகோனிஷ் குமாரி ரெங்க்மா-42


ரெங்க்மாவின் தந்தை ஏவிய முனைப்பகுதி தட்டையான ”கியூரி” தடவப்படாத  அம்புபட்ட ரங்கு அங்கேயே நிலத்தில் சாய்ந்தான். அம்பு எங்கிருந்து வந்தது என்பதை அவன் அறியவாய்பில்லை!

அம்பொன்று தாக்கி ரங்கு நிலத்தில் சாய்ந்ததை ரெங்க்மா கண்டாளே தவிர, அவளும் அது எங்கிருந்து வந்தது, யார் ஏவினார்கள் என்பதை அறியவில்லை! ரெங்க்மாவைக் காப்பாற்ற ஓடி வந்து கொண்டிருந்த செரோக்கி கூட அதனை அறிய மாட்டான்!

ரெங்க்மாவை நோக்கி பதட்டமாக விரைந்து வந்துகொண்டிருந்த செரோக்கியைக் கண்ட ரெங்மாவின்  தந்தை,  இனிமேல் அனைத்தையும் செரோக்கி பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து மறைந்தார்!

வேர்த்து விறுவிறுத்து ஓடிவந்த செரோக்கி, ரெங்க்மாவைக் கட்டியணைத்தபடி அம்பு பட்டு வீழ்ந்திருந்த ரங்குவைத் தன் காலால் எட்டி உதைத்துவிட்டு,  ரெங்க்மாவை நீரோடை நோக்கி அழைத்துச் சென்றான்.

இருவரும் தாம் முன்னர் உட்கார்ந்திருந்த அதே கல்லில் சிறிது நேரம்  இளைப்பாறிவிட்டு, அங்கவஸ்திகைளைக் கலைந்தவர்களாக நீரில் குதித்தனர்.

நீருக்குள் புதைந்திருந்த அவளைத் தொட்டுப் பார்க்க 
வேண்டுமென்ற அவா அவனை நெருடியது! 

மெதுவாக அவளை நெருங்கினான்! வதனத்தை வருடினான்! அவளிடமிருந்து எவ்வித எதிர்ப்பும் வரவில்லை!

தன் இரு கரங்களாலும் அவளது தலையைப் பிடித்து முகத்தைத் தன் முகத்தோடு உரசி, அவளது உதடுகளில் தன் உதடுகளைப் பதியவைத்தபோது, கூட அவள் விடுபட நினைக்கவில்லை! 

அவளி டமிருந்து பச்சை விலக்கு எரிவதை உணர்ந்த செரோக்கி, அவளை  இறுக்கி அணைத்தவனாக அவளது உதடுகளைக் கௌவிக் கொண்டான்! 

(தொடரும்)

செம்மைத்துளியான்




 Ai SONGS

 



Post a Comment

0 Comments