Ticker

6/recent/ticker-posts

Ad Code



திருக்குறள் இன்பத்துப்பால் (குழந்தைகளுக்காக) -76


குறள் 1328
ஊடிப் பெறுகுவம் கொல்லோ 
நுதல்வெயர்ப்பக் கூடலில் தோன்றிய உப்பு.

ஏண்டி கயல் 
நம்ம கவிதா, 
அதாண்டி அய்ந்தாவது 
படிக்கிறாள்ள அவளப்பாரேன் 
என்னப்பார்த்து வியர்க்க 
விறுவிறுக்க மகிழ்ச்சியா 
வர்றா! 
அதப்பாத்தா எனக்கு 
மகிழ்ச்சியா இருக்குது ! 
ஏன்னா ரெண்டு நாளா
பேசாம இன்னக்கிதான் 
பேசுறோம்!
மறுபடியும் 
சண்ட போட்டா இப்படி 
வியர்க்கவியர்க்க 
வருவால்ல! 
இந்தச் செல்லக் கோபம்னா 
அதோட இன்பமே தனிதான்!

குறள் 1329
ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப 
நீடுக மன்னோ இரா.

எங்கள் வீட்டுக்கு 
என் அத்தைமகள் 
பாமதி ஊரிலிருந்து 
வந்திருந்தாள்! 
அருமையா பேசினா! 
என்ன ஆச்சுனுதெரியல! 
என்னோட முகங்கொடுத்துப் 
பேசமாட்டேங்கறா! 
மாடி அறைக்கு வெளியே
 உக்காந்திருக்கா! 
நிலவொளி அருமையா இருக்கு!
அவமுன்னால 
நானோ என்னோட 
பேசுடி பேசுடின்னு 
கெஞ்சிக்கிட்டே இருக்கேன்!
அவளோட கோபமுகமும் 
அழகா இருக்கு!
அஞ்சு வயசுக் குழந்தை 
கொள்ளை அழகு!
இந்த இரவுநேரம் 
நீடிக்காதானு 
ஏங்கித் தவிக்கிறேன்!
அவகிட்ட கெஞ்சிக்கிட்டே 
இருக்கணும்போல இருக்கு.
இன்பத்துப்பால்நிறைவு 
குழந்தைகளுக்காக.

குறள் 1330
ஊடுதல் காமத்திற்கு இன்பம் 
அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

என் உயிர்த்தோழி 
கலையரசி 
ஆறாவது படிக்கின்றாள்!
எழிலரசி நானோ
 ஏழாவது படிக்கின்றேன்!
 இருவரும் இணை
பிரியாத தோழிகள்! 
நட்பு என்ற முகத்தின் 
இருவிழிகளே நாங்கள்தான்! 
எங்களுக்குள்ளும் பொய்க்கோபம்,
செல்லச்சிணுங்கல்,பழுப்புகாண்பித்தல் 
போன்ற குறும்புகளும் உண்டு! 
பொய்க்கோபத்தில் ஆத்திரம் 
கொண்டு விலகிச்செல்வோம்!
தணிந்தவுடன் மீண்டும் 
சரிசரி மன்னிச்சுக்கோடி என்று 
சேர்ந்து சிரிப்போம்!
நட்பிற்கு இன்பமே 
செல்லச்சண்டைதான்!
பிரிந்துசேரும் பொழுது 
அந்தச்சண்டை மீட்டுவதே 
ஓர் இன்பராகந்தான்!

(முற்றும்)



 Ai SONGS

 



Post a Comment

0 Comments