Ticker

6/recent/ticker-posts

Ad Code



மருதப்"பா"வரங்கம்-8


நெசவாளி!
மானமே காக்க மறைத்திடும் ஆடையை
வானமாய்த் தந்ததில் வள்ளல்கள்--

தானத்தால்

ஓங்கி ஒளிர்வ தொருமுழம் ஆடையே
பாங்கில்"நெசவாளி" பாரு:
           

"தந்தவர் வினோபாவே"
(பூமிதானத் தலைவர் 
  சாது வினோபாபா)

நடையாய் நடந்தார் நலிவோர் உயர்ந்திட
கடைநிலை யோர்க்கே கைநிலம் அளித்திட
செல்வர் தம்மால் சேர்த்த நிலங்களில்
பல்லோர் வாழப் பகிர்ந்திடல் வேண்டி
நில்லா துழைத்தார் நிலந்தர வேண்டினார்
எல்லார் தயவும் ஏகினார் ஏழைக்காய்
தனக்கென வாழ்வோர் தரணியில் நிறைவார்
உனக்கென வாழும் உத்தமர் வினோபா
பூமியைத் தானம் தந்தவர்..........
சாமியைக் காட்டித் தருபவர் "வினோபாவே"!

(தொடரும்)        



 Ai SONGS

 



Post a Comment

0 Comments