
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. அந்த தொடரின் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்தியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அதை அடுத்து டிசம்பர் 6ஆம் தேதி அடிலெய்ட் நகரில் துவங்கிய பகல் இரவு டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் இந்தியா களமிறங்கியது.
அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்து வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி 42, ராகுல் 37 ரன்கள் எடுத்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக மிட்சேல் ஸ்டார்க் 6 விக்கெட்டுகளை எடுத்தார். பின்னர் விளையாடிய ஆஸ்திரேலியா நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்தி 337 ரன்கள் குவித்து முன்னிலை பெற்றது.
அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 140, லபுஸ்ஷேன் 64 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக சிராஜ், பும்ரா தலா 4 விக்கெட்டுகளை எடுத்தார்கள். பின்னர் 157 ரன்கள் பின்தங்கிய நிலையில் களமிறங்கிய இந்தியா முன்பை விட படுமோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 165 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஜெய்ஸ்வால் 24, ராகுல் 7, கில் 28, கோலி 11, கேப்டன் ரோஹித் 6 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.
3வது நாளில் காப்பாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பண்ட் 28, அஸ்வின் 7 ரன்களில் அவுட்டானார்கள். அதிகபட்சமாக நித்திஷ் ரெட்டி மீண்டும் 42 ரன்கள் எடுத்து இந்தியாவை குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியிலிருந்து காப்பாற்றினார். ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக கேப்டன் கமின்ஸ் ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார். இறுதியில் 19 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கவாஜா 9*, மெக்ஸ்வீனி 10* ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற வைத்தார்கள்.
அதனால் முதல் போட்டியில் சந்தித்த தோல்வியிலிருந்து மீண்டு வந்த ஆஸ்திரேலியா 1 – 1* (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்து இந்தியாவுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளது. மேலும் வெறும் இரண்டரை நாட்களில் இப்போட்டியில் இந்தியாவை தோற்கடித்த ஆஸ்திரேலியா “எங்க வந்து யார்கிட்ட” என்ற வகையில் தக்க பதிலடி கொடுத்துள்ளது. இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் ஒரு அரை சதம் கூட அடிக்காதது தோல்விக்கு முக்கிய காரணமானது.
கடைசியாக 2021 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்துக்கு எதிராக இப்படி ஒரு அரை சதம் கூட அடிக்காமல் இந்தியா தோற்றது. தற்போது 3 வருடங்கள் கழித்து அதே போன்ற மோசமான சாதனையை பதிவு செய்து இப்போட்டியில் இந்தியா தோற்றுள்ளது. அதனால் இந்திய ரசிகர்கள் மிகப்பெரிய ஏமாற்றத்தை சந்தித்துள்ளார்கள்.
crictamil
மேலும்...தமிழ்நாடு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
மேலும்...இலங்கை செய்திகள்
மேலும்...இந்தியா செய்திகள்
மேலும்...உலக செய்திகள்
மேலும்..விளையாட்டு செய்திகள்
0 Comments