இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே மெல்போர்ன் நகரில் டிசம்பர் 26-ஆம் தேதியான இன்று நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றிபெற்ற ஆஸ்திரேலியா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து தங்களது முதல் இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது. இந்நிலையில் போட்டியின் முதல் நாள் முதல் செஷனின் போது ஆஸ்திரேலிய அணியின் இளம் துவக்க வீரரான சாம் கோன்ஸ்டாஸுடன் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி மோதலின் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் பெருமளவு கவனத்தை ஈர்த்துள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்காக இந்த போட்டியில் அறிமுகமான அவரிடம் விராட் கோலி இப்படி நடந்து கொண்டது தவறு என்று பலரும் கூறி வருகின்றனர். ஏனெனில் இந்த போட்டியின் போது இந்திய அணியின் பந்துவீச்சாளர்களை சற்று அதிரடியாக கையாண்ட சாம் கோன்ஸ்டாசுக்கு எதிராக சிராஜ் வார்த்தை முதலில் ஈடுபட்டார்.
பின்னர் விராட் கோலி ஒரு ஓவர் முடிந்த பிறகு அவரை நோக்கி நடந்து சென்று தனது தோள்பட்டையால் இடித்தது முற்றிலும் தவறான விடயமாகவே உள்ளது என்று பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்களும், நிபுணர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் விராட் கோலி செய்த தவறு நிரூபிக்கப்பட்டால் அவருக்கு என்ன தண்டனை கிடைக்கும்? என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம். அந்த வகையில் ஐசிசி விதிமுறைப்படி எந்த ஒரு வீரரும் மற்ற வீரர்களிடமோ அல்லது மைதானத்தில் உள்ள அதிகாரிகளிடமோ, பார்வையாளர்களிடமோ உடல் ரீதியாக எந்த ஒரு மோதலிலும் ஈடுபடக் கூடாது. அப்படி செய்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தெரியாமல் இரண்டு வீரர்கள் இடித்துக் கொள்வது வேறு, வேண்டுமென்றே அடுத்தவர்களை சீண்டுவது வேறு, அந்த வகையில் விராட் கோலி செய்த தவறினை ஐசிசி மேட்ச் ரெப்ரியான ஆன்டி பைகிராப்ட் தான் பார்த்து முடிவு எடுப்பார் என்று தெரிகிறது. ஒருவேளை விராட் கோலி செய்தது அவருக்கு லெவல் 1 குற்றமாக தெரிந்தால் வெறும் அபராதத்தோடு இந்த விவகாரம் முடிவுக்கு வரும்.
ஆனால் ஆன்டி பைகிராப்ட் விராட் கோலி செய்த தவறு லெவல் 2 வகை குற்றமாக பார்த்து வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் பார்க்கையில் விராட் கோலிக்கு 3-4 தகுதி இழப்பு புள்ளிகள் கொடுக்கப்பட்டு அவரை அடுத்த ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட முடியாமல் தடை செய்யும் அளவிற்கு மிகப்பெரிய தண்டனையை ஆன்டி பைகிராப்ட் அளிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
Email;vettai007@yahoo.com
0 Comments