திரு டோனல்ட் டிரம்ப்பின் (Donald Trump) பதவியேற்புச் சடங்கிற்கு
அமெரிக்காவில் உள்ள Toyota Motor அலுவலகம் 1 மில்லியன் டாலரை (சுமார் 1.36 மில்லியன் வெள்ளி) வழங்கவுள்ளது.
நிறுவனம் அந்தத் தகவலை நேற்று (24 டிசம்பர்) தெரிவித்தது.
அடுத்த மாதம் (ஜனவரி) 20ஆம் தேதியன்று திரு டிரம்ப் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் பதவியேற்கவுள்ளார்.
நேற்று முன்தினம் (23 டிசம்பர்) Ford Motor, General Motors ஆகிய நிறுவனங்களும் சடங்கிற்கு 1 மில்லியன் டாலர் அளிக்கப்போவதாய் தெரிவித்தன.
மேலும் அவை சடங்கிற்குத் தேவைப்படும் வாகனங்களையும் வழங்க முன்வந்துள்ளன.
மெக்சிக்கோ, கனடா ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதியாகும் பொருள்கள் மீது திரு டிரம்ப் வரி விதிக்கத் திட்டமிட்டுள்ளதால் வட அமெரிக்காவில் Toyota உட்பட பல கார் உற்பத்தி நிறுவனங்கள் பாதிக்கப்படலாம்.
அதே வேளையில் தற்போதைய அதிபர் பைடன் மின் வாகனங்கள் குறித்து வகுத்துள்ள கொள்கைகளை மறு பரிசீலனை செய்யவும் திரு டிரம்ப் எண்ணம் கொண்டுள்ளார்.
seithi
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments