தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் அங்கு முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை 2 – 0 (3) என்ற கணக்கில் வென்றது. அடுத்ததாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளிலும் வென்ற பாகிஸ்தான் ஆரம்பத்திலேயே கோப்பையை கைப்பற்றியது. அந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டி டிசம்பர் 22ஆம் தேதி ஜொகனஸ்பர்க் நகரில் நடைபெற்றது.
மழையால் தலா 47 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்கா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் மிகவும் அதிரடியாக விளையாடி 308-9 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக இளம் துவக்க வீரர் சாய்ம் ஆயுப் சதத்தை விளாசி 101 (94) ரன்கள் குவித்தார்.
அவருடன் பாபர் அசாம் 52, கேப்டன் முகமது ரிஸ்வான் 53, சல்மான் ஆகா 48 ரன்கள் எடுத்தனர். தென்னாப்பிரிக்காவுக்கு அதிகபட்சமாக ககிஸோ ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். பின்னர் 308 ரன்களை துரத்திய தென் ஆப்பிரிக்காவுக்கு டீ ஜோர்சி 26, கேப்டன் பவுமா 8, வேன் டெர் டுஷன் 35, ஐடன் மார்க்ரம் 19 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தார்கள்.
இருப்பினும் மிடில் ஆர்டரில் நம்பிக்கை நட்சத்திரம் ஹென்றிச் க்ளாஸென் அதிரடியாக விளையாடி 81 (43) ரன்கள் விளாசி அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த டேவிட் மில்லர் 3, மார்கோ யான்சென் 26 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்கள். இறுதியில் கார்பின் போஸ் 40* ரன்கள் எடுத்தும் தென்னாப்பிரிக்காவை 42 ஓவரில் 271 ரன்களுக்கு சுருட்டிய பாகிஸ்தான் 36 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
பாகிஸ்தானுக்கு அதிகபட்சமாக சூபியன் முஹிம் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 3 – 0 (3) என்ற கணக்கில் இந்தத் தொடரை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் தென்னாபிரிக்காவை அதனுடைய சொந்த மண்ணில் ஒரு இருதரப்பு தொடரில் ஒயிட்வாஸ் செய்த முதல் அணி என்ற உலக சாதனையை பாகிஸ்தான் படைத்துள்ளது. இதற்கு முன் வேறு எந்த அணியும் தென்னாப்பிரிக்காவை சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் செய்ததில்லை.
அந்த வகையில் புதிய கேப்டன் முகமது ரிஸ்வான் தலைமையில் சாதனை வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 2025 சாம்பியன்ஸ் ட்ராபிக்கு தயாராக இருக்கிறோம் என்பதை எதிரணிக்கு காண்பித்துள்ளது. மறுபுறம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்த சுற்றுப்பயணத்தில் 6 போட்டிகளில் தென்னாப்பிரிக்கா ஒரு வெற்றியை கூட பெறவில்லை. அதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா ஒரு சுற்றுப்பயணத்தில் ஒரு வெற்றியைக் கூட பெறாமல் மோசமான சாதனை படைத்தது.
crictamil
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments