கட்சி ஆரம்பித்ததும் ஆட்சிக்கு வருவேன் என்று சொல்வது ஆணவ பேச்சு இல்லையென்றால், திமுக 200 இடங்களில் வெற்றி பெறும் என்று கூறுவது எப்படி ஆணவ பேச்சாகும் என இயக்குநர் கரு.பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
மாநில திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் எழுதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இயக்குநர் கரு பழனியப்பன், விஜய்யை மறைமுகமாக விமர்சித்தார். அதில், “கட்சி ஆரம்பித்த ஒருவர் உடனே நான் ஆட்சிக்கு வரலாம் என்று சொல்லலாமாம். அது எப்படி கட்சி ஆரம்பித்த உடனேயே ஆட்சிக்கு வந்துவிடுவீர்களா.. இது ஆணவ பேச்சு இல்லையாம்.
ஐந்து வருடம் ஆட்சியில் இருந்து நிறைய திட்டங்கள் கொண்டுவந்து, அந்த திட்டங்களை இந்தியா முழுவதும் பின்பற்ற வைத்த கட்சி, 200 இடங்களை வெல்லும் என்று கூறினால் அது ஆணவ பேச்சாம். அவ்வளவு பேரும் சொல்கிறோம். உறுதியாக 200 தொகுதிகளை வெல்வோம்” என்று கூறினார்.
மேலும், பிற மாநில அரசுகள் பின்பற்றும் வகையில் கடந்த 5 வருடங்களில் மக்களுக்கான நல்ல திட்டங்களை கொண்டு வந்த அரசு 200 இடங்களை கட்டாயம் பிடிக்கும் என கரு பழனியப்பன் தெரிவித்தார்.
news18
கட்டுரைகள் | Ai SONGS |
0 Comments