Ticker

6/recent/ticker-posts

இளையர்களிடையே ‘கேபோட்ஸ்’ போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பயன்பாடு அதிகரிப்பு: சிங்கப்பூர் கவலை


இளையர்களிடையே ‘கேபோட்ஸ்’ அல்லது போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் பயன்பாடு அதிகரித்திருப்பது குறித்து சிங்கப்பூர் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

‘கேபோட்ஸ்’ என்பது அறுவை அற்ற சிகிச்சைகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘ஈடோமிடேட்’ எனும் மயக்க மருந்து கலந்த மின்சிகரெட் திரவமாகும்.

இது பற்றிய உரையாடல்களும் பயன்பாடும் 12 முதல் 19 வயது வரையுள்ளோரிடம் அதிகரிப்பதைக் காணமுடிவதாத சமூக சேவை அமைப்புகள் கூறின.

நச்சு சட்டத்தின் கீழ் ஈடோமிடேட் நஞ்சாக வகைப்படுத்தப்படுகிறது. இதை இங்கு இறக்குமதி செய்ய அல்லது விற்க உரிமம் தேவை.

ஆறு குழுக்கள் தகவல் பரிமாற்றச் செயலியான டெலிகிராமில் ‘கேபோட்ஸ்’ விற்பனை செய்வதை ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஊடகம் அறிந்தது. சில நூற்றுக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ளன. சில குழுக்கள் அரை மணி நேரத்திற்குள் தயாரிப்புகளை வழங்குவதாக வாக்குறுதிகள் அளிக்கின்றன.

டெலிகிராம் குழுக்களில் சில விற்பனையாளர்கள் கெட்டமைனுடன் மின்சிகரெட் திரவத்தையும் விற்பதாகக் கூறின. கெட்டமைன், அவசரகால பராமரிப்பில் வலி நிவாரணம் அல்லது குறுகிய அறுவை சிகிச்சைகளில் மயக்க மருந்தாகப் பயன்படுத்தக்கூடியது.

சிங்கப்பூரில் ‘ஏ’ பிரிவு கட்டுப்படுத்தப்பட்ட மருந்தாக பட்டியலிடப்பட்டுள்ளது. இந்த மருந்தைக் கடத்துவது, உற்பத்தி, இறக்குமதி, ஏற்றுமதி, செய்தல், வைத்திருப்பது அல்லது உட்கொள்வது சட்டவிரோதமானது.

அத்தகைய போதைப்பொருள் நிறைந்த மின்சிகரெட் விலை $50 முதல் $100 வரை இருக்கும் என்று  கூறுகின்றனர். ஒரு சாதாரண மின்சிகரெட் $10 முதல் $70 வரை விற்கப்படுகிறது.

இந்த விவகாரம் குறித்து சுகாதார அறிவியல் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு ஆகியவை கண்காணித்து வருகிறது.

அண்மைய விசாரணையில், ‘எடோமிடேட்’ கொண்ட மூன்று மின்சிகரெட் திரவப் பயன்பாட்டு சம்பவங்களும் கெட்டமின் தொடர்பான ஒரு சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தேக நபர்கள் விசாரணையில் உள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர்களுக்கு சிறை அல்லது அபராதம் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் மின்சிகரெட் சாதனங்களை வைத்திருப்பது அல்லது பயன்படுத்துவது குற்றம். அவற்றை விற்றால் அல்லது விநிகியோத்தால் அபராதம் சிறை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த தயாரிப்புகள் பெரும்பாலும் டெலிகிராம் போன்ற தகவல் அனுப்பும் செயலிகளில் விளம்பரப்படுத்தப்படுகின்றன.

புகைப்பிடித்தலைவிட மின்சிகரெட் பாதுகாப்பானது என்ற கண்ணோட்டம் காரணமாக இளையர்கள் கேபிட்களுக்கு ஈர்க்கப்படுவதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மலேசியா, தாய்லாந்து, ஹாங்காங், தைவான் ஆகியவை போதைப்பொருள் கலந்த மின்சிகரெட் தயாரிப்பு தொடர்புடைய சம்பவங்கள் அதிகரித்து வருவதாகத் தெரிவித்துள்ளன.

மே மாதத்தில், மெத்தாம்பேட்டமைன், போதைமிகு அபின் கொண்ட மின்சிகரெட்டை விற்றதற்காக இரு சிங்கப்பூரர்கள் பேங்காக்கில் கைது செய்யப்பட்டனர். இதேபோன்ற பொருள்களை விற்பனை செய்தது தொடர்பாக மலேசிய அதிகாரிகளும் அக்டோபரில் மூவரைக் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

nambikkai



Post a Comment

0 Comments